1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
2. சிலப்பதிகாரத்தின் காலம் எது? கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
3. சிலப்பதிகாரத்தின் பா யாது? நிலைமண்டில ஆசிரியப்பா
4. சிலப்பதிகாரத்தின் சமயம் யாது? சமணம்
5. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் எத்தனை? 3 [புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்]
6. சிலப்பதிகாரத்தின் காதைகள் எத்தனை? 30 [புகார்க்காண்டம் - 10 காதைகள், மதுரைக்காண்டம் - 13, வஞ்சிக்காண்டம் - 7காதைகள்]
7. சிலபதிகார, கூறும் மூன்று உண்மைகள் யாவை? அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்]
8. சிலப்பதிகாரத்தில் பதிகத்தை அடுத்து இடம்பெற்றுள்ள பகுதி யாது? உரைபெறு கட்டுரை [வெற்றிவேற் செழியன், கொங்கிளங்கோசர், கயவாகு மன்னன், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் குறித்தக் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.
9. உரைபெறு கட்டுரை உரைநடையால் ஆனது. இதனால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயராயிற்று.
10. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படும்? சம்பு காவியம்
11. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இசைசார் பகுதிகள்? மங்கல வாழ்த்து, அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, வாழ்த்துக் காதை
12. அரங்கேற்றுக் காதையில் மாதவி ஆடிய நடனங்கள் எத்தனை? 11
13. சிலப்பதிகாரத்தில் போற்றப்படுபவை யாவை? திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார்
14. அரங்கேற்றுக்காதையில் திரை எவ்வாறு அழைக்கப்படும்? எழினி
15. அரங்கேற்று காதையில் இடம்பெறும் திரை வகைகள் யாவை? ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி
16. ஒருமுக எழினி என்றால் என்ன? ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்லும் திரை
17. பொருமுக எழினி என்றால் என்ன? இரு ஓரங்களில் இருந்தும் மேடையின் நடுவில் வந்து பொருந்தும் எழினி
18. கரந்து வரல் எழினி என்றால் என்ன? மேலே இருந்து கீழே இறங்கி வரும் எழினி
19. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சதகர்ணிகள் என்போர் யாவர்? மகத நாட்டு நூற்றுவர் கன்னர்
20. சிலப்பதிகாரம் வடமொழியில் எவ்வாறு அழைக்கப்படும்? நூபுர காவியம், நூபுர கதா
21. கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்த நாள்? ஆடி மாத வெள்ளிக்கிழமை [எனவே பெண்கள் ஆடி வெள்ளியைக் கொண்டாடுவதாக மு. வரதராசனார்]
22. சிலப்பதிகாரம் என அழைக்கப்பட காரணம் யாது? ஊழ்வினை சிலம்பு காரணமாக நாட்டுதும் யானோர் பாட்டுடைச் செய்யுள் என இளங்கோவடிகள் கூறுகிறார்.
23. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை? முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், முத்தமிழ்க் காப்பியம், முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகக்காப்பியம், குடிமக்கள் காப்பியம், புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், தம்ழ்த்தேசியக் காப்பியம், மூவேந்த காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக் காப்பியம்
24. முத்தமிழ்க் காப்பியம் என்றால் என்ன? இயல் இசை நாடகம் அமைந்தமையால்
25. சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்றவர் யார்? தெ. பொ. மீ
26. சிலப்பதிகாரத்தில் ஐந்திணைக் கூறுகள் - குறிஞ்சி - குன்றக்குரவை, முல்லை - ஆய்ச்சியர் குரவை, மருதம் - நாடிகாண் காதை, நெய்தல் - கானல் வரி, பாலை - வேட்டுவவரி
27. சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8 ஆம் நூற் என்றவர் - வையாபுரிபிள்ளை
28. சிலம்பின் காலம் 2 ஆம் நூற்றாண்டு என்பதற்குக் காரணம்? கண்ணகி கோவிலுக்கு இலங்கை மன்னன் வந்தமை [அவனது காலம் கி.பி. 2 என மகாவம்சம் குறிக்கிறது.
29. மணி மேகலையின் ஆசிரியர்? மதுரை கூல வணிகன் சீத்தலை சாத்தனார்
30. மணிமேகலை பாடல் அடிகள் - 4286
31. மணிமேகலை காதை - 30
32. மணிமேகலையின் வேறு பெயர்? மணிமேகலைத் துறவு
33. மணிமேகலை குறித்து மது.ச. விமலானந்தம் உரைப்பவை? திருவள்ளுவரைப் பெய்யில் புலவன் என்றும், திருக்குறளை பொருளுர என்றும் போற்றும் முதல் பனுவம்
34. மணிமேகலை குறித்தி துறைமங்கலம் கூறுவது யாது? கொந்தார் குழல் மணிமேகலை நூல்நுட்பம் கொள்வது எங்ஙன்
35. காப்பியங்களைத் தமிழ் அன்னையின் ஆபரணங்களாகக் காட்டியவர் யார்? சுத்தானந்த பாரதியார்
36. மணிமேகலை எத்தகுப் பாவகையால் இயற்றப்பட்டது? நிலைமண்டில ஆசிரியப்பா
37. முதல் சமயக்காப்பியம் யாது? மணிமேகலை
38. மணிமேகலையை உ.வே.சா. எவ்வாறு குறிக்கிறார்? சமயக் கலைச்சொல் காப்பியம்
39. மணிமேகலை கதைக்களஞ்சியக் காப்பியம் என அழைக்கப்படக் காரணம் யாது? மிகுதியான கிளைக்கதைகள் உள்ளதால்
40. "மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே" என்று குறிப்பிடும் இலக்கியம்? அம்பிகாபதிக் கோவை
41. "திருநாகரும், தரும பாலரும் கண்ட தருக்க நெறியின் மொழிபெயர்ப்புகள் மணிமேகலையின் இடைச்செருகல்" என்றவர்? தெ. பொ.மீ
42. "வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும் திருக்குறளைப் பொருளுரை என்றும் முதன் முதல் காப்பியத்தில் வைத்துப் போற்றும் முதல் பனுவல் என மணிமேகலையைக் குறிப்பவர்? மது.ச. விமலானந்தம்
43. சிலப்பதிகாரம், மணிமேகலையில் ஒத்தமையும் செய்யுள்கள்? "பசியும் பிணியும் பகையும் நீங்கி / வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" "வச்சிரக் கோட்டத்து மண்ங்கெழு முரசம்/ கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்ற"
44. சிலப்பதிகாரத்தில் சீவகன் பின்பற்றும் நெறி யாது? சாவக நோன்பி
45. சிலப்பதிகாரம் காட்டும் வைதீக நெறியினர் யார்? மாடலமறையோன்
46. சிலப்பதிகாரம் காட்டும் சமணத்துறவி யார்? கவுந்தி அடிகள்
47. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி மணிமேகலை என்பதைக் குறிப்பது யாது? "மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்" என்னும் சிலம்பின் இறுதியில் வரும் தொடர் மூலம் அறியலாம்
48. மணிமேகலையில் பௌத்த நெறி உரைக்கும் காதைகள் யாவை? சமயக்கணக்கர் தம் திறம் கேட்டக் காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்டக்காதை, பவத்திறம் அறுகென பாவ நோற்ற காதை
49. மணிமேகலையை 'சமுதாய சீர்திருத்தங்களின் களஞ்சியம்" எனப்பாராட்டியவர் யார்? வ. சுப. மாணிக்கம்
50. சீத்தலை சாத்தனாரை இளங்கோவடிகள் எவ்வாறு குறிக்கிறார்? தண்டமிழாசான் சாத்தனார்
51. மணிமேகலையின் முதல் காதை யாது? விழாவறைக் காதை
52. விழாவறைக்காதை சுட்டும் விழா யாது? இந்திரவிழா [28 நாள் நடக்கும்]
53. மணிமேகலையின் இறுதிக் காதை யாது? பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
54. மாதவியின் தாய் யார்? சித்திராபதி
55. மணிமேகலையின் தோழி யார்? சுதமதி
56. மணிமேகைலை மலர்ப்பறிக்கச் சென்ற வனம் யாது? உவவனம்
57. உவவனத்தில் உதயனனிடம் இருந்து தப்ப மணிமேகலை எங்கு ஒளிந்தாள்? பளிக்கறை
58. மணிமேகலையை மணிமேகலா தெய்வம் எங்கு தூக்கிச்சென்றது? மணிபல்லவத்தீவு
59. மணிபல்லவத்தீவில் மணிமேகலைக்குப் பழம் பிறப்பு உணர்த்தியது யாது? புத்தபீடிகை
60. மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கும் வகை கூறியது யார்? தீவதிலகை
61. மணிமேகலை அமுத சுரபியில் முதன்முதலில் உணவு பெற்ற பத்தினி யார்? ஆதிரை
62. மணிமேகலையால் யானைத்தீ[பசி] நோய் நீங்கியவள் யார்? காயசண்டிகை
63. உதயகுமரனைக் கொன்ற காயசண்டிகையின் கணவன் பெயர் யாது? விஞ்சையன்
64. மணிமேகலையை சிறையிலிட்ட உதயகுமரனின் தாய் யார்? சோழமாதேவி
65. மணிமேகலை பவத்திறம் அறுகென பாவை நோற்ற இடம் யாது? காஞ்சி
66. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்கத் தேவர்
67. திருத்தக்கத் தேவர் எச்சங்கத்தச் சேர்ந்தவர்? மதுரைத் திரமிள சங்கம்
68. சீவக சிந்தாமணியின் காலம் யாத்? கி.பி 5ஆம் நூற்றாண்டு
69. சீவக சிந்தாமணி எச்சமயக் காப்பியம்? சமணம்
70. சீவக சிந்தாமணி எப்பாவால் ஆனது? விருத்தப்பா
71. சீவக சிந்தாமணியின் பாடல்கள் எத்தனை? 3147
72. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது? 13
73. சீவக சிந்தாமணியின் வேறு பெயர் யாது? மணநூல்
74. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்கத்தேவர்
75. திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக்கு இட்ட பெயர்? சிந்தாமணி [சிந்தாமணி சரிதம் சிதர்ந்தேன்]
76. திருத்தக்கத்தேவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? திருத்தகு மாமுனிகள், திருத்தகு மகா முனிவர், திருத்தகு முனிவர், திருத்தக்க மகாமுனிகள்
77. சீவகன் பிறந்த போது அவனது தாய்/ அசரிரி எவ்வாறு வாழ்த்தினாள்? சீவ
78. சீவகன் எத்தனை மணங்கள் புரிந்தான்? 8
79. சீவகன் யாழிசையில் வென்று மணம் செய்தது? காந்தருவதத்தை
80. சீவகன் மத யானையை அடக்கி மணம் செய்தது யாரை? குணமாலை
81. சீவகன் பாம்பு நஞ்சை நீக்கி மணம் செய்தது யாரை? பதுமை
82. சீவகன் காதல் கொண்டு திருமணம் செய்தது யாரை? கேமசரி, விமலை
83. சீவகன் வில்வித்தைக் கற்பித்து மணந்தது யாரை? கனகமாலை
84. சீவகன் கிழவன் வேடம் பூண்டு காதலித்து மணந்தது யாரை? சுரமஞ்சரி
85. சீவகன் மணந்த மாமன் மகள் யார்? இலக்கணை
86. சீவகன் கோவிந்தனுக்கு யாரை மணம் செய்து வைத்தான்? கோவிந்தை
87. திருத்தக்கத்தேவரின் ஆசிரியர் யார்? அச்சணந்தி
88. திருத்தக்கத்தேவர் சீவகசிந்தாமணிக்கு முன் பாடிய இலக்கியம் யாது? நரிவிருத்தம்
89. சீவகனின் தந்தைப் பெயர் யாது? சச்சந்தன்
90. சச்சந்தன் எந்த நாட்டு மன்னன்? ஏமாங்கத நாடு
91. சீவகனின் தாய் பெயர் என்ன? விசையை
92. சச்சந்தனுக்கு எதிராக சூழ்ச்சி செய்த அமைச்சர் யார்? கட்டியங்காரன்
93. சீவகனின் வளர்ப்புத் தந்தை யார்? கந்துக்கடன்
94. சீவகன் யாரிடம் கல்வி பயின்றார்? அச்சணந்தி
95. விருத்தப்பாவால் ஆன முதல் காப்பியம் யாது? சீவகசிந்தாமணி
96. சிலப்பதிகாரத்தின் எப்பகுதி விருத்தப்பாவால் ஆனது? கானல் வரி
97. சீவகன் கதைத்தழுவி இயற்றப்பட்ட வடமொழி நூல்கள் யாவை? ஷத்திர சூடாமணி, ஶ்ரீ புராணாம், கத்ய சிந்தாமணி
98. "சிந்தாமணியில் ஓர் அகப்பை முகந்துகொண்டேன் என்றவர் யார்? கம்பன்
99. சிந்தாமணியில் கண்டி என்னும் புலவர் தம் பாடல்களை இடைச்செருகலாகச் சேர்த்தார் எனக்கூறுபவர் யார்? நச்சினார்க்கினியர்
100. "தமிழ் மொழிக்கு இலியட்டும் இதுவே ஒடிசியும் இதுவே" எனப்புகழ்ந்தவர் யார்? ஜி.யு.போப்
101. திருத்தக்கத்தேவர் குறித்தக் குறிப்புக் காணப்படும் கல்வெட்டு யாது? மைசூர் அருகில் 'சிரவண பெலகோலாக் கல்வெட்டு'
102. வளையாபதியின் காலம் யாது? 9ஆம் நூற்றாண்டு
103. வளாயாபதி சீவகசிந்தாமணிக்கு முற்பட்டது எனக் கூறும் அறிஞர் யார்? தெ.பொ.மீ
104. வளையாபதியில் கிடைத்துள்ள பாடல்கள் எத்தனை? 73
105. வளையாபதி செய்யுட்கள் எங்கிருந்து திரட்டப்பட்டு உள்ளன? புறத்திரட்டு, யாப்பெருங்கல விருத்தியுரை, சிலப்பதிகார உரை, தொல்காப்பிய உரை
106. 'கவியழகு வேண்டி' வளையாபதியை நினைத்தவர் யார்? ஒட்டக்கூத்தர்
107. வளையாபதி கதை காணப்படும் வடமொழி இலக்கியம் யாது? வைசிய புராணத்தின் 35 ஆம் அத்தியாயம்
108. குண்டலகேசியின் ஆசிரியர் யார்? நாதகுத்தனார்
109. குண்டலகேசியின் காலம் யாது? 8 ஆம் நூற்றாண்டு
110. குண்டலகேசி பாடல்களில் இன்று கிடைப்பவை? 19 பாடல்கள்
111. குண்டலகேசியின் சமயம் யாது? பௌத்தம்
112. குண்டலகேசியின் கதைத் தலைவியின் பெயர்? பத்திரை
113. குண்டலகேசியின் பெயர்க்காரணம் யார்? சுருண்ட கூந்தலை உடையவள்
114. பத்திரையின் கணவன் பெயர் யாது? காளன்
115. குண்டலகேசியை தருக்க நூல் எனக்குறிப்பிடும் இலக்கணம் யாது? யாப்பருங்கல விருத்தி
116. ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை? நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம்
117. நீலகேசியின் காலம் யாது? கி.பி. 5/6
118. நீலகேசியின் சருக்கங்கள் எத்தனை? 10
119. நீலகேசியின் பாடல்கள் யாவை? 894
120. நீலகேசி என்பதன் பொருள் யாது? கரிய கூந்தலை உடையவள்
121. நீலகேசியின் வேறு பெயர்கள் யாவை? நீலகேசி தெருட்டு, நீலகேசி திரட்டு
122. நீலகேசியின் உரை நூல் யாது? சமய திவாகர வாமன முனிவரால் செய்யப்பட்ட சமய திவாகரம்
123. காளிக்கு உயிர்பலி தருவதைத் தடுத்த முனிவர் யார்? முனிச்சந்திரர் என்னும் சமண முனிவர்
124. முனிச்சந்திரரின் தவத்தைக் கெடுக்க காளி யாரை காமலோகையாக அனுப்புகிறது? பழையனூர் நீலி
125. நீலகேசியால் சமய வாதத்தால் வெல்லப்பட்டவர்கள் யாவர்? குண்டலகேசி, அர்த்த சுந்தரர், ஆசீவகர், சாங்கியர்
126. கேசி என்னும் பெயரால் ஆன சமய வாத நூல்கள் யாவை? குண்டலகேசி, அஞ்சனகேசி, காலகேசி, நீலகேசி
127. நீலகேசியை நீலம் என அழைக்கும் நூல் யாது? யாப்பருங்கல விருத்தியுரை
128. நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுந்தது? குண்டலகேசி
129. நீலகேசி உரையாசிரியர் வாமன முனிவரின் வேறு பெயர்கள் யாவை? வாமனாச்சாரியார், மல்லிசேனாசாரியார்
130. சூளாமணியின் ஆசிரியர் யார்? தோலாமொழித்தேவர்
131. சூளாமணியின் காலம் யாது? கி.பி 7 - 10 ஆம் நூற்றாண்டு
132. சூளாமணியின் சருக்கங்கள் யாவை? 12
133. சூளாமணி பாடல்களின் எண்ணிக்கை? 2131/ 2330
134. சூளாமணியின் கதைத்தலைவன் யார்? திவிட்டன்
135. சூளாமணி எதைத் தழுவி இயற்றப்பட்டது? ஶ்ரீ புராணம், ஆருகத புராணம்
136. விருத்தப்பாவைக் கையாள்வதில் சூளாமணி ஆசிரியர் சிந்தாமணி ஆசிரியரை மிஞ்சிவிட்டார் என்றவர் யார்? மு.வ.
137. பாகவதம் சூளாமணியோடு கதைப்போக்கில் ஒத்துள்ளன எனக் குறிப்பிடுபவர் யார்? தமிழண்ணல்
138. சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி என்றவர் யார்? கி.வா. ஜகன்னாதன்
139. சிந்தாமணியிலும்கூட இத்தகைய ஓட்டமும் இனிமையும் இல்லை என்றவர் யார்? தெ. பொ. மீ
140. விசயனும், திவிட்டனும் எவர்களைப் போல சித்திரிக்கப்பட்டுள்ளனர்? கண்ணன், பலராமன்
141.
யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்? வெண்ணாவலூர் உடையார் வேள்
142. யசோதர காவியத்தின் காலம் யாது? கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
143. யசோதர காவியத்தின் பாடல்களின் அளவு? 320 [5 சருக்கங்கள்]
144. யசோதர காவியம் காட்டும் உதய நாட்டு மன்னர் யார்? மாரிதத்தன்
145. மாரிதத்தன் பலிகொடுக்க அழைத்து வந்த இரட்டையர்கள் யாவர்? அபயருசி, அபயமதி
146. அவந்தி நாட்டு மன்னன் மாரிதத்தனின் மகன் யார்? யசோதரன்
147. யசோதரனின் மனைவி பெயர் என்ன? அமிர்தமதி
148. அமிர்தமதி மயங்கிய இசை யாது? மாளவப்பஞ்சமம்
149. அமிர்தமதி யாரை நஞ்சிட்டுக் கொன்றாள்? கணவன் யசோதரன், மாமியார் சந்திரமதி
150. யசோதரனும், சந்திரமதியும் மறுபிறவியில் யாராகப் பிறந்தனர்? அபயருசி, அபயமதி
151. யசோதர காவியத்தின் கதை இடம்பெற்றுள்ள வடமொழி நூல் யாது? குணபத்திரர் எழுதிய உத்தரபுராணம்
152. யசோதர காவியம் எதைத் தழுவி இயற்றப்பட்டது? புட்பதந்தர் எழுதிய யசோதர சரிதம்
153. யசோதரக்காவியம் எத்தகு உத்தியில் இயற்றப்பட்டது? பின்னோக்கு உத்தி
154. உதயண குமாரத்தின் ஆசிரியர் யார்? கந்தியார் [பெண் துறவி]
155. உதயண குமாரத்தின் காலம் ? கி.பி. 15 நூற்றாண்டு
156. உதயண குமார காவித்தின் காலம் 15 ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பவர் யார்? மது. ச. விமலானந்தம்
157. வத்தவ நாட்டு மன்னன் பெயர் யாது? உதயணன்
158. உதயண குமார காவியத்தின் காண்டங்கள் எத்தனை? 6
159. உதயண குமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 369
160. உதயண குமார காவியத்திற்கு உரை எழுதியவர் யார்? பொ.வே. சோமசுந்தரனார்
161. நாக குமார காவியத்தின் காலம் யாது? கி. பி. 16ஆம் நூற்றாண்டு
162. நாககுமார காவியத்தின் பாடல்கள் எத்தனை? 170
163. நாககுமார காவியத்தின் சருக்கங்கள் எத்தனை? 5
164. மகத நாட்டு மன்னன் யார்? சிரோணிகன்
165. சிரோணிகனின் மனைவி யார்? சாலினி
166. சிரோணிகனுக்கு நாகபஞ்சமி பற்றி உரைத்தவர் யார்? வரவீரநாத முனிவர்
167. நாககுமாரனின் இயற்பெயர் யாது? பிரதாபந்தன்
168. நாககுமார காவியத்தின் மூலத்தைத் தந்தவர் யார்? வட ஆர்க்காடு மாவட்ட சமண அறிஞர் ஜெ. சின்னசாமி நயினார்
169. நாக குமார காவியம் எதில் வெளியானது? தமிழாய்வு
170. நாக குமார காவியத்தைப் பதிப்பித்தவர் யார்? மு. சண்முகம் பிள்ளை
171. நாககுமார காவியம் வெளியிடப்பட்ட ஆண்டு யாது? 1973
172. காப்பியம் எனது எதன் திரிபு? காவ்யா என்ற வட சொல்லின் இயல்பு
173. காப்பிய இலக்கணம் கூறும் நூல் யாது? தண்டியலங்காரம்
174. ஐம்பெரும் காப்பியங்கள் என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? மயிலைநாதர் [நன்னூல் உரை]
175. ஐம்பெருங்காப்பியங்களின் நூற்பெயரைக் குறிப்பிடுபவர் யார்? கந்தப்ப தேசிகர்
176. ஐஞ்சிறு காப்பியங்கள் எப்பாவால் ஆனவை? விருத்தப்பா
177. ஐஞ்சிறு காப்பியங்கள் எச்சமயம் சார்ந்தவை? சமணம்
178. இளங்கோவடிகள் துறவு பூண்டு அமர்ந்த இடம் எது? குணவாயில் கோட்டம்
179. சிலப்பதிகாரம் காட்டும் மதுரையின் காவல் தெய்வம் யார்? மதுராபுரி தெய்வம்
180. கண்ணகி மதுரையை எரித்ததாக நம்பப்படும் காலம் யாது? ஆடி மாதம், கிருஷ்ண பட்சம் எட்டாம் நாள், கார்த்திகையும் வெள்ளியும் சேர்ந்திருந்த வெள்ளிக்கிழமை

Tags:
இலக்கிய வரலாறு