தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 09

21) ”சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு

 

A) சொல்லுவேன்

B) சொன்னேன்

C) சொல்வேன்

D) சொல்கின்றேன்

22) சொற்களை சரியாக இணைத்து புதிய சொல் உருவாக்குக – புளியங் ...........

 

A) கன்று

B) குருத்து

C) பிள்ளை

D) மடலி

 

23) மனிதநேயம் என்ற சொல்லில் இணைந்துள்ள இரண்டு சொற்களைக் கண்டறிக

 

A) மனிதன், நேயம்

B) மனிதம், நேயம்

C) மனிதா், நேயம்

D) மனிதள், நேயம்

 

24) இவற்றுள் எது சரியானது? - நிகழ்காலத்தைத் தோ்ந்தெடுத்து எழுதுக

 

A) சுடா்க்கொடி பாடினாள்

B) சுடா்க்கொடி பாடுகிறாள்

C) சுடா்க்கொடி பாடுவாள்

D) சுடா்க்கொடியால் பாடப்பட்டது

 

25) மல்லிகைப் பந்தலின் கீழே தங்கினான். - தங்கினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்

 

A) நிகழ்காலம்

B) இறந்தகாலம்

C) எதிர்காலம்

D) சங்ககாலம்

 

26) சரியான வினாச்சொல்லைத் தோ்ந்தெடு

 

A) ஆழ்வார்கள் எத்தனை போ்?

B) ஆழ்வார்கள் பத்து பேர்?

C) ஆழ்வார்கள் இங்கும் இடம்?

D) ஆழ்வார்கள் பாடிய பாடல்?

 

 

27) சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

 

A) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் என்ன?

B) அறநெறிச்சாரம் அறிவுடையது?

C) அறநெறிச்சாரம் விளக்கம் தருவது?

D) அறநெறிச்சாரம் பொருள் அறிவது?

 

 

28) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

எனக்கு ——————— பங்கு பிரித்துக் கொடுக்க வா!

கீழே ஈரம் பார்த்து உன் ————————- ஐ வை.

 

A) கை

B) கால்

C) அகல்

D) அலை

 

29) வல்லினம் மிகும் மிகாத் தொடா்களின் பொருளறிந்து பொருத்துக.

 

a) பாலை பாடினான் – 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்

b) பாலைப் பாடினான் – 2) தேரினைப் பார்த்தான்

c) தேரை பார்த்தான் – 3) பாலினைப் பாடினான்

d) தேரைப் பார்த்தான் – 4) பாலைத் திணை பாடினான்

 

A)  4        1        3        2

B)  2        3        1        4

C)  4        3        1        2

D)  2       4        1        3

 

30) பின்வரும் தொடரில் உள்ள நால்வகை சொற்களில் உரிச்சொல்லை தேர்ந்தெடு - வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்

 

A) ஏறினா்

B) வளவனும் தங்கையும்

C) பேருந்த

D) மாநகரம்

 

31) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (முழை)

 

A) சிங்கம் —————– யில் வாழும்

B) பறவை ——————யில் வாழும்

C) யானை —————–யில் வாழும்

D) எலி ——————– யில் வாழும்

 

32) இரு பொருள் தருக. - துய்ப்பது

 

A) உண்பது, துாய்மை

B) கற்பது, தருதல்

C) நுகா்வது, துாய்மை

D) துாய்மை, தருதல்

 

33) இரு பொருள் தருக (நுால்)

 

A) ஆடை நெய்வது, மூதுரை அறநுால்

B) பூணுால், செய்தி

C) அறநுால், மாலை

D) ஆடை தைப்பது. நேரம்

 

34) அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்கள் பொருந்தக் கூடிய தொடரைக் கண்டறிக

 

(பட்டு – பாட்டு)

 

A) கவலைப்பட்ட வாழ்விற்குப் பாட்டு அவசியம்

B) நுாண்டிலில் பட்ட மீனைப் பாட்டுப் பாடி இழுத்தான்

C) பட்டு மெத்தையில் பாட்டுக் கேட்டபடி துாங்கினாள்

D) துன்பப்பட்டு வாழும் வாழ்வில் பாட்டுக்கு என்ன வேலை?

 

35) குறில் – நெடில் மாற்றம், பொருள் வேறுபாடு தருக - சிறு – சீறு

 

A) வறுமை – புலி

B) கருமை – வலிமை

C) சிறுமை – பாய்தல்

D) கருவி – சிறியது

 

36) கூற்று : பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத்தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது மங்கலம் ஆகும்.

 

காரணம்: பொற்கொல்லா் பொன்னைப் “பறி“ என்று உரைப்பர்

 

A) கூற்று, காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி, காரணம் தவறு

C) கூற்று தவறு காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

 

37) கூற்று: வாய்ப்பூட்டுச் சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவா்கள் வட இந்தியாவில் பாலகங்காதர திலகரும், தென்னாட்டில் முத்துராமலிங்கரும் ஆவா்

காரணம் :  ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

 

38) காலைச்சொல் அறிதல் - Paaddy

 

A) சோளப்பயிர்

B) நெற்பயிர்

C) வாழை

D) கரும்பு

 

39) கலைச் சொல் அறிதல் - Poet

 

A) ஓவியா்

B) எழுத்தாளா்

C) கவிஞா்

D) பாடகா்

 

40) அடிவகைகளில் தவறான இணை எது?

 

A) தாள் – கேழ்வரகு

B) தண்டு – வாழை

C) துாறு – புதா்

D) கோல் – குத்துச் செடி

Post a Comment

Previous Post Next Post