Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 10

41) பூக்கையைக் குவித்து பூவே புரிவோடு காக்க என்று வேண்டியது

 

A) கருணையன் பூக்களுக்காக

B) கருணையன் எலிசபெத்துக்காக

C) எலிசபெத் தமக்காக

D) எலிசபெத் பூமிக்காக

 

42) சொல்லும் பொருளும் சரியானது எது?

 

A) பாசவா் – வெற்றிலை

B) ஓசுநா் – நெய்பவா்

C) மண்ணுள் வினைஞா் – சிற்பி

D) வாசவா் – எண்ணெய் விற்பவா்

 

43) தொகையின் வகை எது? - பெரியமீசை சிரித்தார்

 

A) வேற்றுமைத் தொகை

B) உம்மைத் தொகை

C) அன்மொழித் தொகை

D) பண்புத் தொகை

 

44) அருந்துணை என்பதை பிரித்தால்

 

A) அருமை + துணை

B) அரு + துணை

C) அருமை + இணை

D) அரு + இணை

 

45) சரியான அகர வரிசை எது?

 

A) உழவு, மண், ஏர், மாடு

B) மண், மாடு, ஏர், உழவு

C) உழவு, ஏர், மண், மாடு

D) ஏர், உழவு, மாடு, மண்

 

46) வீரனைப் புகழ்ந்து பாடுவது எந்த திணை?

 

A) வெட்சித் திணை

B) வஞ்சித் திணை

C) நொச்சித் திணை

D) பாடான் திணை

 

47) சரியான கூட்டுப் பொயரைத் தேர்ந்தெடு

 

வேலமரம்

A) வேலந்தோப்பு

B) வேல மரங்கள்

C) வேலங்காடு

D) வேலக்கொல்லை

 

48) சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க

 

A) உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

B) கழுத்தை இடமாகக் கொண்டு உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் பிறக்கின்றன

C) பன்னிரண்டு உயிர் எழுத்துகள் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

D) பிறக்கின்ற உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

 

49) பின்வருவனவற்றுள் முறையான தொடரைத் தேர்ந்தெடுக்க

 

A) தமிழா் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

B) தமிழா் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

C) தமிழா் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

D) தமிழா் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

 

50) பிழை திருத்துக - கோவலன் சிலம்பு விற்கப் போனாள்

 

A) கோவலன் சிலம்பு விற்கப் போனான்

B) கோவலன் சிலம்பு விற்கப் போணாள்

C) கோவலன் சிலம்பு விற்கப் போனார்

D) கோவலன் சிலம்பு விற்கப் போகின்றார்

 

51) பிழை திருத்துக - கண்ணகி சிலம்பு அணிந்தான்

 

A) கண்ணகி சிலம்பு அனிவித்தாள்

B) கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்

C) கண்ணகி சிலம்பு அணிந்தது

D) கண்ணகி சிலம்பு அணிந்தாள்

52) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக)

 

a) எளிது – 1. புரவலா்

b) ஈதல் – 2. அரிது

c) அந்தியா் – 3. ஏற்றல்

d) இரவலா் – 4. உறவினா்

 

A) 3  1  2   4

B) 2  3  4  1

C) 1  4  3  2

D) 4  2  1  3

 

53) சொல் – பொருள் கொருத்துதல்

 

a) நாற்று – 1. பறித்தல்

b) நீர் – 2. அறுத்தல்

c) கதிர் – 3. நடுதல்

d) களை – 4. பாய்ச்சுதல்

 

A)  3       4        2        1

B)  3       1        4        2

C)  4       2        1        3

D)  2       3        1        4

 

54) ஒருமை பன்மை பிழை - குழந்தைகள் ——————-இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்

 

A) தாம்

B) தம்மால்

C) தமக்கு

D) தன்னால்

 

55) ஒருமை பன்மை பிழை நீக்குக - சிறுமி —————— கையில் மலர்களை வைத்திருந்தாள்

 

A) தன்

B) தாம்

C) தனது

D) தமது

 

கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தோ்ந்தெடு

 

ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நுாலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படகின்றன. உலகலாவிய தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலம் கன்னிமாரா நுாலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நுாலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நுாலகம். கொல்கத்தாவில் 1936-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நுாலகமே இந்தியாவின் மிகப் பெரிய நுாலகமாகும். இது ஆவணக் காப்பக நுாலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நுாலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.

 

56) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?

 

A) சுரசுவதி மகால் நுாலகம்

B) கன்னிமாரா நுாலகம்

C) திருவனந்தபுரம் நடுவண்நுாலகம்

D) தேசிய நுாலகம்

 

57) சரசுவதி மகால் நுாலகம் அமைந்துள்ள இடம் யாது?

 

A) தஞ்சாவூர்

B) திருச்சி

C) கோவை

D) சென்னை

 

58) தேசிய நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு

 

A) 1836

B) 1953

C) 1957

D) 1837

 

59) உலகில் மிகப் பெரிய நுாலகம் எது?

 

A) தஞ்சை சரஸ்வதி மஹால்

B) கன்னிமாரா நுாலகம்

C) லைப்ரரி ஆப் காங்கிரஸ்

D) லைப்ரரி ஆப் அமெரிக்கா

 

60) தேசிய நுாலகத்தின் சிறப்பம்சம்

 

A) ஓலைச்சுவடிகள்

B) புத்தக நகல்கள்

C) ஆவணக் காப்பகம்

D) படிமங்கள்

No comments:

Post a Comment