இன்று முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும்

இன்று முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும்

10, 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்.5-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவுள்ளனர்.
ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம்.! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம்.! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமற்ற தகவலைகளை நம்ப வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு TV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நட்த்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய OMR விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளமை கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது. ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் 3,167 பணியிடங்கள்... விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன

தமிழ்நாடு அஞ்சல் அலுவலகங்களில் 3,167 பணியிடங்கள்... விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, தேர்வர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 3,167

குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் உள்ளூர் மொழிப் பாடங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், கண்டிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டும் நபராகவும் இருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 16.03.2023 அன்று, 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரையும், பட்டியல்/பழங்குடியின வகுப்பினர் 5 ஆண்டுகள் வரையும், மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரையும் தளர்வுகள் கோரலாம்.

எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்தது 80% மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் இதில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமுள்ளன.

தமிழ்நாட்டில் மண்டலம் வாரியான அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:

மண்டலம் காலியிடம்

Vellore Division 39
Tuticorin Division 76
Tiruvannamalai Division 129
Tirupattur Division 68
Tirunelveli Division 94
Tiruchirapalli Division 113
Theni Division 65
Thanjavur Division 75
Tambaram Division 111
Sivaganga Division 47
salem west division 76
Salem East Division 95
RMS T Division 5
RMS MA Division 3
RMS M Division 2
RMS CB Division 13
Ramanathapuram Division 77
Pudukkottai Division 74
Pondicherry Division 111
Pollachi Division 51
Pattukottai Division 53
Nilgiris Division 54
Namakkal Division 111
Nagapattinam Division 65
Mayiladuthurai Division 56
Madurai Division 99
Krishnagiri Division 76
Kovilpatti Division 71
Karur Division 55
Karaikudi Division 31
Kumbakonam Division 48
Kanniyakumari Division 73
Kanchipuram Division 87
Erode Division 100
Dindigul Division 74
Cuddalore Division 113
Dharmapuri Division 72
Coimbatore Division 74
Chengalpattu Division 70
Arakkonam Division 73
Srirangam Division 53

விண்ணப்பம் செய்வது எப்படி? இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், இதர தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்களை அளிக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும். பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

குறும்பட போட்டிக்கு மாணவ, மாணவிகளை அழைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்

குறும்பட போட்டிக்கு மாணவ, மாணவிகளை அழைக்கிறது அண்ணா பல்கலைக்கழகம்


ஜி - 20 மாநாட்டை இந்தியா நடத்துவதையொட்டி, குறும்பட போட்டியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ‘ஜி - 20’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை, இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இதையடுத்து குறும்பட போட்டியை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள எந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ - மாணவிகளும், இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்தும், அதில், சுகாதாரம், கல்வி, எரிசக்தி, சுற்றுச்சூழல், தட்ப வெப்பநிலை மாற்றம், பெண்களுக்கான அதிகாரம், ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு, நிதி, வாழ்வியல், வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில், ஏதாவது ஒன்று குறித்தும், குறும்படங்கள் இடம் பெற வேண்டும் என பல்கலையின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறும்பட விடியோக்களை பிப். 28-ஆம் தேதிக்குள் இணையவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஆன்லைன் இணைப்பு முகவரி, அண்ணா பல்கலையின், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை‌

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை‌


தமிழகத்தில் 9 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, அதற்கான தரவுகள், சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மாா்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கா்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் அத்தகைய தாக்கத்துக்கு உள்ளாகும் பெண்களில் 25 சதவீதம் போ் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆண்டுதோறும் 80 ஆயிரம் பெண்களுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே அதற்கான தடுப்பூசியை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உத்தேசித்தது.

அதன்படி, ஹெச்பிவி எனப்படும் அந்த தடுப்பூசியை முதல்கட்டமாக தமிழகம், கா்நாடகம், மிஸோரம், சத்தீஸ்கா், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்த ஆயத்த நிலையில் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவிகளின் விவரங்களை திரட்டி வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதுகுறித்த தகவல்களை கேட்டுள்ளோம். மத்திய அரசு சாா்பில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னா், அதனை முறையாக குளிா்பதன முறையில் பாதுகாத்து பயனாளிகளுக்கு அவா்களது பள்ளிகள், அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதால் அதற்கான வழிகாட்டுதல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்படும். கரோனா தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதைப் போலவே கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்றனா் அவா்கள்.
IIT Madras: இனி இணைய வழியில் B.Ed., படிக்கலாம், ஐஐடி மெட்ராஸின் புதிய அறிவிப்பு!

IIT Madras: இனி இணைய வழியில் B.Ed., படிக்கலாம், ஐஐடி மெட்ராஸின் புதிய அறிவிப்பு!

பள்ளி ஆசிரியர்களிடையே கணித பாடத்தின் பயிற்றுவித்தல் தரத்தை மேம்படுத்த இணைய வழி B.Ed வகுப்புகளைத் தொடங்கவிருக்கிறது ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம்.

சமீபத்தில் நடந்த G20 கருத்தரங்கில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் காமகோட்டி தெரிவித்திருக்கிறார்.
கணிதம் (Mathematics)

கடந்த வாரம் நடைபெற்ற G20 கருத்தரங்கில் ஒன்பது நாடுகளுக்கும் மேலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அந்நிகழ்வில் 'கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தரத்தை உயர்த்துவது குறித்தான வழிகள் பலவும் விவாதிக்கப்பட்டன.

அதில் பங்குபெற்ற மத்திய அரசின் உயர்கல்வி செயலாளர் சஞ்சய் மூர்த்தி பேசுகையில், "அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து கற்றலின் தரத்தை உயர்த்துவதற்கான அருமையான வாய்ப்பு நமக்குள்ளது. அதை நாம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

அதைத் தொடர்ந்து, "நிகழ்கால உலகில் ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒரு முறை நம் திறன்களை மறு ஆய்வு செய்து அதை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உள்ளது" என்றார் மத்திய திறன் மேம்பாட்டுச் செயலாளர் அதுல் குமார் திவாரி.

Bachelor of Education B.Ed.,

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஆன்லைன் B.Ed வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தரவுகளின் படி கணிதப்பாடத்தை முறையாகக் கற்க இயலாத காரணத்தால் தொடக்கக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை சுமார் 30% மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் தங்கள் கல்வியை நிறுத்துகின்றனர். இதற்கான மாற்றம் ஆசிரியர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்பதால் ஐஐடி மெட்ராஸின் இந்த ஆன்லைன் B.Ed வகுப்புகள் நல்லதொரு தொடக்கப்புள்ளி. இதற்கான விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
 வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம்!

வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம்!

Assessment year 2009-2010 ஆண்டு கணக்கிற்கான வீட்டு கடன் மீதான அசலும் , வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப்படியும் கழித்துக் கொள்ளளாமா என்று விளக்கம் / விபரம் கேட்டுள்ளீர்கள் . அதற்கான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது


மேலே உள்ள அனைத்து தொகைகளும் கழித்து கொள்ளலாம். இந்த கழிவு பற்றிய முழு விபரம் வருமானவரி சட்டம் பிரிவு 24 - ம் மற்றும் பிரிவு 10 ( 13A ) - விலும் உள்ளது
24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு.

24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கருவூலகத்துறை உத்தரவு.

பணம் பெற்று வழங்கும் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சில விவரங்கள் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதத்திற்கான Mark for Recalculation தொடர்பான பணிகள் அனைத்தையும் 20.02.2023.ற்கு முன்னதாக முடித்து 24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் 24.02.2023 பின்னதாக பிப்ரவரி . 2023 மாத்திற்கான சம்பளப் பட்டியல்கள் தொடர்பான ' Mark for Recalculation ' முடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
TNPSC : குரூப் - 4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வலியுறுத்தல்

TNPSC : குரூப் - 4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வலியுறுத்தல்

குரூப் - 4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான நான்காம் தொகுதி தேர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஜூலை 24-ந்தேதி நடத்தப்பட்டது. 

டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டிருந்த அறிவிக்கையின்படி, ஜூலை மாதம் நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வுக்கான முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதே மாதத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு, நவம்பர் மாதத்தில் அவை சரி பார்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவை எதுவுமே நடக்கவில்லை. ஜனவரி மாத இறுதியில் தான், நியமனம் செய்யப்பட வேண்டிய நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை 9801 ஆக உயர்த்தப்படுவதாகவும், பிப்ரவரியில் முடிவுகள் அறிவிக்கப் படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது. குரூப்-4 தேர்வை 18.50 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினார்கள். இவ்வளவு இளைஞர்களின் எதிர்காலம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கைகளில் இருக்கும் நிலையில், அதற்கேற்ற பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது. அரசுப்பணி என்பது தான் தமிழ்நாட்டில் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ளது. ஒரு போட்டித் தேர்வை எழுதிய மாணவர்கள், அதன் முடிவை அறிந்தால் தான் அடுத்தப் போட்டித் தேர்வுக்கு முழு மனதுடன் தயாராக முடியும்.

இத்தகைய சூழலில் ஒரு தேர்வை அறிவித்து, நடத்தி, முடிவுகளை அறிவிப்பதற்கு ஓராண்டை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் உணர்வுகளை தேர்வாணையம் மதிக்க வேண்டும். நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஓர் அடுக்கு கொண்ட போட்டித்தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி பணி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 5 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். ஈரடுக்கு தேர்வு கொண்ட முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி நியமன ஆணை வழங்குவது வரையிலான அனைத்து நடைமுறைகளும் 9 மாதங்களில் முடிக்கப்படுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களில் 2 லட்சம் பணியிடங்கள் காலி: மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில் 1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி சேவைகள் : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்துள்ளார்.


அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் 12.7.2018 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள் 30.06.2022 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள்

அங்கன்வாடி பணியாளர் - 54,439 49,109 44,628

அங்கன்வாடி உதவியாளர் 49,499 43, 954 40,036

கடந்த 2019ம் ஆண்டு, இதேபோன்று எழுப்பப்பட்ட போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் 49,109 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களும், 43, 954 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பொது மாறுதல் மூலம் கலந்தாய்வு நடத்திட வேண்டும், பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.
அறிவியல் குறிப்புகள் (அதிகரிப்பு அல்லது குறைப்பு வரிசை)

அறிவியல் குறிப்புகள் (அதிகரிப்பு அல்லது குறைப்பு வரிசை)

01. உருகுநிலை= Li > Na > K > Rb > Cs 

02. சுடரின் நிறம்= லி-சிவப்பு, நா-கோல்டன், கே-வயலட், ஆர்பி-சிவப்பு, சிஎஸ்-
ப்ளூ, சிஏ-பிரிக் சிவப்பு, எஸ்ஆர்-இரத்த சிவப்பு, பா-ஆப்பிள் பச்சை 

03. ஹைட்ரைடுகளின் நிலைத்தன்மை = LiH > NaH > KH > RbH > CsH 

04. ஹைட்ராக்சைடுகளின் அடிப்படை இயல்பு= LIOH < NaOH < KOH < RbOH < CsOH 

05. நீரேற்ற ஆற்றல்= Li> Na> K> Rb> Cs 

06. தன்மையைக் குறைத்தல்= Li > Cs > Rb > K > Na 

07. நிலைத்தன்மை +3 ஆக்சிஜனேற்ற நிலை= B> Al > Ga > In > T1 

08. நிலைத்தன்மை +1 ஆக்சிஜனேற்ற நிலை= Ga < இல் < TI 

09. ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகளின் அடிப்படை இயல்பு= பி< அல்< கா <இன் < TI 

10. லூயிஸ் அமிலத்தின் ஒப்பீட்டு வலிமை= BF3 < BCl3 < BBr3 < BI3 

11. அயனியாக்கம் ஆற்றல்= B> Al In SiO2 > Ge02 > SnO2 > PbO2 

12. ஹைட்ரைடுகளின் தன்மையைக் குறைத்தல்= CH4 < SiH4 < GeH4 < SnH4 < PbH4 

13. டெட்ராஹலைடுகளின் வெப்ப நிலைத்தன்மை= CCL4> SiCl4> GeCl4> SnCl4> PbCl4 

14. M+4 இனங்களின் ஆக்ஸிஜனேற்ற தன்மை= GeCl4 < SnCl4 < PbCl4 

15. டெட்ராஹலைடுகளின் நீராற்பகுப்பின் எளிமை= SiCl4 < GeCl4 < SnCl4 < PbCI4 

16. ட்ரை ஆக்சைடுகளின் அமில வலிமை= N203 > P2O3 > As2O3 

17. பென்டாக்சைடுகளின் அமில வலிமை= N2O2 > P2O2> As202 > Sb2O2 > Bi’202 

18. நைட்ரஜனின் ஆக்சைடுகளின் அமில வலிமை= N2O < NO PH3 > Ash3 > SbH3 > BiH3 

19. நைட்ரஜனின் ட்ரைஹலைடுகளின் நிலைத்தன்மை= NF3 > NCl3 > NBr3 

20.லூயிஸ் அடிப்படை வலிமை= NF3 PCI3 > AsCl3 > SbCl3 > BiCl3 

21. P, As, மற்றும் Sb= இன் ட்ரைஹலைடுகளின் லூயிஸ் அமில வலிமை PCl3 > ASCl3 > SbCl3 

22. பாஸ்பரஸ் ட்ரைஹலைடுகளில் லூயிஸ் அமில வலிமை PF3 > PCl3 > PBr3 > PI3 

23. ஹைட்ரைடுகளின் உருகும் மற்றும் கொதிநிலை = H2O > H2Te > H2Se >H2S 

24. ஹைட்ரைடுகளின் நிலையற்ற தன்மை= H2O < H2Te < H2Se < H2S 

25. ஹைட்ரைடுகளின் தன்மையைக் குறைத்தல்= H2S < H2Se < H2Te 

26. ஹைட்ரைடுகளின் கோவலன்ட் தன்மை= H2O < H2S < H2Se < H2Te 

27. ஆக்சைடுகளின் அமிலத் தன்மை (ஒரே ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ள உறுப்புகள்)= SO2 > SeO2 > TeO2 > PoO2 SO3 > SeO3 > TeO3 

28. ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்சைட்டின் அமிலத் தன்மை (எ.கா. எஸ்)= SO < SO2 < SO3 SO2 > TeO2 > SeO2 > PoO2 

29. ஆலஜன்களின் பிணைப்பு ஆற்றல்= Cl2 > Br2 > F2 > I2 

30. நீரில் ஆலஜனின் கரைதிறன் = F2 > Cl2 > Br2 > I2 

31. ஆக்ஸிஜனேற்ற சக்தி= F2 > Cl2 > Br2 > I2 

32. எக்ஸ் அயனியின் நீரேற்றத்தின் என்டல்பி= F- > Cl- > Br- >I- 

33. ஆலசன்களின் வினைத்திறன்:= F> Cl> Br > I 

34. ஹாலைடுகளில் M-X பிணைப்பின் அயனித் தன்மை = M-F > M-Cl > MBr > M-I 

35. X அயனியின் தன்மையைக் குறைத்தல்:= I- > Br- > Cl- > F- 

36. ஆலசன் அமிலங்களின் அமில வலிமை= HI > HBr > HCI > HF 

37. ஹைட்ரஜன் ஹைலைடுகளின் பண்புகளைக் குறைத்தல் = HF < HCL < HBr < HI 

38. குளோரின் ஆக்சைடுகளின் ஆக்ஸிஜனேற்ற சக்தி = Cl2O > ClO2 > Cl206 > Cl2O7 

39. அயனி அளவு குறைதல்= 02- > F- > Na+ > Mg2+ 

40. அமிலத் தன்மையை அதிகரிக்கும்= Na2O3 < MgO < ZnO< P205 

41. அதிகரிக்கும் பிணைப்பு நீளம்= N2 <02 < F2 < CL2 

42. அதிகரிக்கும் அளவு= Ca2+ < Cl- ​​< S2- 

43. அமில வலிமையை அதிகரிப்பது= HClO < HClO2 < HClO3 < HClO4 

44. அயோடின் ஆக்சிஜனேற்றம் எண்ணிக்கையை அதிகரிப்பது= HI< I2
மக்களே இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு..!!

மக்களே இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்.. உங்களுக்கான எச்சரிக்கை பதிவு..!!

நமது உடல் சுற்று சூழலுக்கு தகுந்தாற் போல் வேலை செய்யும். அதாவது வெளிச்சமாக இருக்கும் நேரங்களில், சுறுசுறுப்பாக இயங்கவும், இருட்டான இடங்களில் தூங்குவதற்கு தகுந்த மாதிரி இயற்கை வடிவமைத்து உள்ளது.

அதனால் தான் இரவில் தூங்கி பகலில் வேலை செய்ய உடல் பழக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் வேலை செய்து உடல் அசதியாக இருக்கும். அதனால் இரவில் தூங்கி அடுத்த நாள் காலை எழுவது உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவவும்.

ஆனால் இரவில் விளக்குகளை அனைத்து விட்டு நீண்ட நேரம் வேலை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது, மூளைக்கு இன்னும் இருட்டாக வில்லை, வெளிச்சமாக இருக்கிறது , நாம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற சிக்னலை அனுப்புகிறது. அதனால் மூளை தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும். ஆனால் அடுத்த நாள் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் நாம் மூளையை நீண்ட நேரம் ஏமாற்றி வெளிச்சமாக வைத்து தூங்காமல் வைத்து இருப்பது தான் காரணம்

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு காலத்தில் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திய செல்போன்களுக்கு இன்று சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். இதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக செல்போன் அதிக நேரம் பயன்படுத்தினாலும், இருட்டில் பயன்படுத்துவதாலும் கண் பார்வை பறிபோய்விடும் என எச்சரித்துள்ளனர். அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தினமும் தனது வீட்டில் இருட்டில் ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இழந்த பார்வையை திரும்பவும் மீட்டெடுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா.? தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்.!

ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா.? தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்.!தமிழகம் முழுவதும் பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ குறைதீர்‌ முகாமில்‌ பொதுமக்கள்‌ தங்களது குறைகளை வட்ட வழங்கல்‌ அலுவலரிடம்‌ தெரிவித்து குறை நிவர்த்தி செய்யலாம்.

இக்குறைதீர்‌ முகாமில்‌, குடும்ப அட்டைகளில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, பெயர்‌ நீக்கம்‌, முகவரி மாற்றம்‌, புதிய குடும்ப அட்டை / நகல்‌ அட்டை கோரும்‌ மனுக்களை பதிவு செய்தல்‌ ஆகிய சேவைகளை வேண்டி முகாமில்‌ கோரிக்கையினை அளிக்கும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ அட்டைதாரர்கள்‌ சார்பாக ஆன்லைன்‌ பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள்‌ மூலமாக மேற்கொள்ளலாம்‌. கைபேசி எண்‌ பதிவு / மாற்றம்‌ செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின்‌ அவற்றையும்‌ பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்‌.

பொது விநியோக கடைகளின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ தரம்‌ குறித்த புகார்கள்‌ அளிக்கலாம்‌. தனியார்‌ சந்தையில்‌ விற்கப்படும்‌ பொருட்கள்‌ மற்றும்‌ சேவை குறைபாடுகள்‌ குறித்த புகார்களை நுகர்வோர்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌, 2019-ன்படிமேற்கொள்ள உரிய அறிவுரைகள்‌ வழங்கும்‌ வகையிலும்‌ நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில்‌ அளிக்கலாம்.
ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் சனிக்கிழமை (பிப்.11) வெளியிட உள்ளது. திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் சனிக்கிழமை (பிப்.11) வெளியிட உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் கருவறை கோபுரத்தில் தங்கத் தகடுகள் பொருத்தும் பணிகள் தொடங்க இருந்ததை அடுத்து தேவஸ்தானம் பிப்.21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை பாலாலயம் செய்ய முடிவு செய்தது. எனவே, அந்த நாள்களில் தரிசனங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்கத் தகடுகள் பொருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பிப்.21 முதல் 28 வரை ரத்து செய்யப்பட்ட தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் தற்போது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தா்களுகளின் வசதிக்காக பிப்.23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலான தரிசன டிக்கெட்டுகள் சனிக்கிழமை (பிப்.11) காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

டிக்கெட்டுகளை பக்தா்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல், வரும் 22-ஆம் தேதி முதல் 28 வரையிலான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு வரும் 13-ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்று காலை 9 மணி முதல் டிக்கெட்டுகளை பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

2003 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டம் செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

2003 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்குமாறு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. ஆனந்த வெங்கடேசன் அவர்களின் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை!

ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை!

ஆசிரியர்கள் இடமாற்றம் - இடைக்காலத் தடை

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்காலத் தடை

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜனவரி 31 வரை வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியல் வெளியீடு...!

ஜனவரி 31 வரை வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியல் வெளியீடு...!

தமிழ்நாடு முழுவதும் 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்களை தற்போது மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள், 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேரும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக...தலைமுடியை தானமாக கொடுத்த கல்லூரி மாணவிகள்!

அதேசமயம் 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 46 முதல் 60 வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 734 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 நபர்களும் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வை தள்ளி வைக்கக் கோரி கோரிக்கை எழுந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தேர்வை தள்ளி வைக்க இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்திருந்தன.
என்ன செஞ்சாலும் சுகர் குறையலையா.. காலையில் வெறும் வயிற்றில் வெங்காய ஜூஸ் குடிங்க!

என்ன செஞ்சாலும் சுகர் குறையலையா.. காலையில் வெறும் வயிற்றில் வெங்காய ஜூஸ் குடிங்க!


நீரிழிவு நோயில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயமாகும். ஏனெனில் உணவு விஷயத்தில் சிறிது கவனக்குறைவு இருந்தால் கூட இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

இதன் காரணமாக பல உடல் பிரச்சினைகள் தொடங்குகின்றன. எனவே, சர்க்கரையை கட்டுப்படுத்த, தினமும் காலையில் குறைந்தது அரை கப் பச்சை வெங்காய சாற்றை குடிக்கத் தொடங்குங்கள். நீரிழிவு நோயாளிகள் வெங்காயச் சாற்றை உட்கொள்ளத் தொடங்கினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை 50 சதவிகிதம் குறைக்கலாம். அதுமட்டுமின்றி யூரிக் அமிலம் முதல் கொலஸ்ட்ரால் வரை அனைத்தையும் இந்த ஜூஸ் அற்புதமாகக் குறைக்கிறது. வெங்காயம் சாப்பிடுவது எடை இழப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காயத்தில் பல ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்ஸிடன்ட்கள்) இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் நல்ல ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகின்றன. 'ஹீலிங் ஸ்பைசஸ்' புத்தகத்தில், கொரியாவில் உள்ள விஞ்ஞானிகள் குழு இரத்த சர்க்கரையை குறைக்க டைப்-2நீரிழிவு நோய் உள்ள விலங்குகளுக்கு வெங்காய சாற்றைக் கொடுத்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அதைக் குடித்த பிறகு சர்க்கரையின் அளவு குறையத் தொடங்கியது என்றும், அதன் தாக்கம் நீண்ட காலம் நீடித்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கு வெங்காயம் சிறப்பாக பலனளிப்பதன் காரணம்

1. அதிக நார்ச்சத்து

வெங்காயத்தில் குறிப்பாக சிவப்பு வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வெங்காயத்தில் நார்ச்சத்து கணிசமாக உள்ளது. ஃபைபர் உடைந்து ஜீரணிக்க நேரம் எடுக்கும், இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதை உறுதி செய்கிறது. நார்ச்சத்து உங்கள் மலத்தில் அதிக அளவில் சேர்க்கிறது, இது மலச்சிக்கலைக் குறைக்க உதவும், இது நீரிழிவு நோயாளிகளிடையே பொதுவான பிரச்சனையாகும்.

2. கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது

வெங்காயத்தில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவு. 100 கிராம் சிவப்பு வெங்காயத்தில் சுமார் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக வளர்சிதை மாற்றமடைந்து, இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை விரைவாக வெளியிடுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குறைந்த கார்ப்போஹைட்ரேட் உணவுகளை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூடுதலாக, வெங்காயத்தில் கலோரிகளும் குறைவாக உள்ளது, மேலும் ஆரோக்கியமான எடை இழப்பு திட்டத்திற்கு பாதுகாப்பாக கருதலாம்.

3. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்

வெங்காயம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட காய்கறி. பச்சை வெங்காயத்தின் கிளைசெமிக் குறியீடு 10 ஆகும், இது சர்க்கரை நோயாளிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆரோக்கியமான நீரிழிவு உணவில் வெங்காயத்தை எவ்வாறு சேர்ப்பது

'சுற்றுச்சூழல் ஆரோக்கிய நுண்ணறிவு' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், புதிய வெங்காயத்தை உட்கொள்வதால், டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. நீங்கள் சூப்கள், பங்குகள், சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களில் வெங்காயத்தை சேர்க்கலாம். அதுமட்டுமின்றி இதன் சாற்றை எலுமிச்சையுடன் சேர்த்தும் குடிக்கலாம்.

வெங்காயத்தின் மற்ற ஆரோக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது புற்றுநோய்க்கு எதிரான பண்புகளால் செறிவூட்டப்பட்டது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டது

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அரசு மருத்துவமனைகளில் பல்வேறு வேலைவாய்ப்பு

சிவகங்கைமாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம், நகர்நல வாழ்வு மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம்
மருத்துவ அலுவலர் 4 40 ரூ.60,000
பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை II 12 35 ரூ.14,000
மருத்துவமனைப் பணியாளர் 4 45 ரூ.8,500

கல்வித்தகுதி:

பதவியின் பெயர் கல்வி
மருத்துவ அலுவலர் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை II 12 ஆம் வகுப்பில் உயிரியல்/தாவரவியல் அல்லது விலங்கியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பில் தமிழ் மொழி கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi-Purpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector பிரிவில் 2 வருடச் சான்றிதழ் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவமனைப் பணியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் https://sivaganga.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல் தளம்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
சிவகங்கை.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5 மணி வரை.