Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, October 14, 2024

காய்ச்சல் முதல் இருமல் வரை குணமாக்கும் சித்தரத்தை



பொதுவாக பார்ப்பதற்கு இஞ்சி போல இருக்கும் சித்தரத்தையில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம் .

1.இதன் மூலம் காய்ச்சல் , இருமல் , சளி தொல்லைகளை குணப்படுத்தலாம்.

2.மேலும் மூட்டு வலி , கால்வலி , உடல் உஷ்ணம் , மூச்சு திணறல்  ,ரத்த உற்பத்தி போன்ற நோய்களுக்கு இந்த சித்தரத்தை பயன் படும்

3.சிலருக்கு உடலில் அதிக நோய் இருக்கும் .சித்தரத்தை உடலில் உள்ள உடல் உபாதைகளைக் குணமாக்கும்.

4.சிலருக்கு வாந்தி உணர்வு எப்போதும் இருக்கும் .காலை எழுந்ததும் வரக்கூடிய குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவற்றை குணமாக்கும்.

5.காலை எழுந்தவுடன் ஒரு துண்டு சித்தரத்தையை வாயில் போட்டு மென்றால் பல பிரச்சினைகள் நீங்கும்.

6.நோய் எதிர்ப்பு சக்திஇல்லாமல் சிலர் இருப்பர் . இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகப்படுத்துகின்றது.

7.சிலருக்கு ஜுரம் அடிக்கடி வரும் .இந்த காய்ச்சலைக் குணப்படுத்த உதவுகின்றது. பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகின்றது