Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, October 14, 2024

உடலில் உள்ள 100 நோய்களை குணமாக்கும் மூலிகை சூப்! வாரம் ஒருமுறை குடியுங்கள்!!



இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமாகும்.ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கத்தால் பலரும் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்க முருங்கை கீரையில் சூப் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை - ஒரு கப்
2)நெய் - ஒரு ஸ்பூன்
3)சீரகம் - ஒரு ஸ்பூன்
4)பூண்டு - இரண்டு
5)சின்ன வெங்காயம் - ஐந்து
6)இஞ்சி - ஒரு துண்டு
7)உப்பு - தேவையான அளவு
8)மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
9)தக்காளி - ஒன்று
10)மிளகு - நான்கு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கைப்பிடி முருங்கை இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதன் பிறகு ஐந்து சின்ன வெங்காயம் மற்றும் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதேபோல் ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு உரலில் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் நான்கு கரு மிளகு சேர்த்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.

எப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும்.பிறகு அதில் இடித்த சீரகம் மிளகு சேர்த்து வதக்கவும்.

அடுத்து நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு வதக்கவும்.பிறகு நறுக்கிய தக்காளி பழத்தை வதக்கி கொள்ளவும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை போட்டு வதக்கவும்.

பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி முருங்கை கீரை சூப்பை கொதிக்கவிடவும்.சில நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

இந்த சூப்பை இளஞ்சூட்டில் குடிக்கவும்.அடிக்கடி இந்த சூப்பை குடித்து வந்தால் முதுகு வலி,மூட்டு வலி,தோள்பட்டை வலி,கழுத்து வலி,எலும்பு தேய்மானம்,மலச்சிக்கல்,உடல் சூடு உள்ளிட்ட பல பாதிப்புகளை குணமாக்கும்.