தமிழகத்தில் குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது அவசியம்.
அந்தவகையில் குடும்பத்தில் ஒருவரின் இறப்பினால் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்க வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும். திருமணமானவர்கள் என்றால் திருமணச் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனை ஆன்லைனிலும் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பங்கள் வந்தால் சான்றிதழ்கள் இருக்கும்பட்சத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது குடும்ப அட்டையில் பெயரை நீக்க அதிகாரிகள் நேரடி சரிபார்ப்பு முறையை மேற்கொள்கின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள்/ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து சரிபார்த்து பெயர் நீக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றனர். இதில் தவறான தகவல்கள், தவறான விண்ணப்பங்கள் காரணமாக மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் விண்ணப்பத்தின் அடிப்படையில், உயிருடன் உள்ளவர்களின் பெயர்கள், பல குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தற்போது குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கு அதிகாரிகள் நேரில் களச் சரிபார்ப்பு முறை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேரடி சரிபார்ப்பு நடைமுறையில் இருந்தாலும், அவை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படவில்லை,
Tags:
APPLY