நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் மத்திய அரசு வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்தது.
இத்திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகிறது.வீடு இல்லாத ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பயனாளிகளுக்கு மத்திய அரசு தரப்பில் 1.31 லட்சம் மற்றும் மாநில அரசு சார்பில் 1.72 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட குறைவான வடியில் கடன் வழங்கப்படுகிறது.நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளுக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டில் கழிப்பறை வசதி,குடிநீர் வசதி,LPG மற்றும் மின்சார வசதி போன்றவை இடம் பெறும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா தகுதி
ஆண்டு வருமானம் ரூ.3,00,000க்கு கீழ் இருக்க வேண்டும்.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இருப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பெயரில் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.அதேபோல் விண்ணப்பிக்கும் நபரின் குடும்பத்தில் யாரும் அரசுப் பணியில் இருக்கக் கூடாது.
இத்திட்டத்திற்கு தகுதியானால் முதலில் ரூ.50,000 மானியம் வழங்கப்படும்.பிறகு 1.5 லட்சம் இரண்டாவது தவணையாகவும் ரூ.5,000 மூன்றாவது தவணையாகவும் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்:
1)வருமான சான்று
2)ஆதார் அட்டை
3)முகவரி சான்று
4)சொத்து ஆவணங்கள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் விண்ணப்பம் செய்ய PMAY - https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
Tags:
APPLY