பதினெண் கீழ்கணக்கு அக நூல்கள் வினா விடைகள்

  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் எத்தனை? 6
  2. கார்நாற்பதின் ஆசிரியர் - மதுரை கண்ணங்கூத்தனார்
  3. கார்நாற்பதின் பாடல்கள் - 40
  4. கார்நாற்பது திணை - முல்லை
  5. கார்நாற்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  6. கார்நாற்பது காட்டும் கடவுளர்கள் - திருமால், பலராமன், சிவன்
  7. கார்நாற்பதில் காட்டப்படும் விழா - கார்த்திகை விழா
  8. ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் யார்? மாறன் பொறையனார்
  9. ஐந்திணை ஐம்பதின் காலம் - கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
  10. ஐந்திணை ஐம்பது பாடல் எண்ணிக்கை - 50
  11. ஐந்திணை ஐம்பதை மேற்கோளாகக் எடுத்தாண்டுள்ள உரையாசிரியர்கள் யாவர்? பேராசிரியர், நச்சினார்க்கினியர்
  12. ஐந்திணை எழுபதின் ஆசிரியர் - மூவாதியார்
  13. ஐந்திணை எழுபதின் பாடல் எண்ணிக்கை - 70 [5X14]
  14. ஐந்திணை எழுபதின் திணை வைப்பு முறை - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
  15. ஐந்திணை எழுபதில் தற்போது கிடைப்பவை? 66 [முல்லை-2, நெய்தல்-2 கிடைக்கவில்லை]
  16. ஐந்திணை எழுபதில் வாழ்த்தப்படும் கடவுள் - விநாயகர்
  17. திணைமொழி ஐம்பதின் ஆசிரியர் - கண்ணஞ்சேந்தனார்
  18. திணைமொழி ஐம்பதின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  19. திணைமொழி ஐம்பதின் திணை வைப்புமுறை - குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  20. திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியர் யார்? கணிமேதாவியார்
  21. திணைமாலை நூற்றைம்பதின் பாடல் எண்ணிக்கை - 153+1 [1-பாயிரம்]
  22. திணைமாலை நூற்றைம்பதின் வைப்புமுறை - குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
  23. கைந்நிலையை இயற்றியவர் யார்? புல்லங்காடனார்
  24. புல்லங்காடனார் யாருடைய மகன் - மாறோகத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகன்
  25. கைந்நிலை பாடல்கள் எண்ணிக்கை - 60 [5 X 12]
  26. கைந்நிலையின் காலம் யாது? கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
  27. கைந்நிலை -யில் கை என்பது குறிப்பது - ஒழுக்கம், நிலை - ஒழுக்கம்
  28. கைந்நிலையில் இடம்பெறும் வடசொற்கள் - பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம்

Post a Comment

Previous Post Next Post