வைணவ இலக்கியம் வினா விடைகள் - 03

  1. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் எது? காஞ்சியில் உள்ள திருவெஃகாவில் பிறந்தார்.
  2. பொய்கையாழ்வார் பெயர் காரணம் யாது? தாமரைப் பொய்கையில் பிறந்ததால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்
  3. பொய்கையாழ்வார் பிறந்த நாள் யாது? ஐப்பசி திங்கள் திருவோண நாள்
  4. பொய்கையாழ்வாரின் காலம் யாது? கி.பி. 6/8 ஆம் நூற்றாண்டு
  5. திருமாலின் சங்கின் பெயர் யாது? பாஞ்சசன்னியம்
  6. பாஞ்சசன்னியத்தின் அவதாரமாகத் தோன்றிய ஆழ்வார் யார்? பொய்கையாழ்வார்
  7. பொய்கையாழ்வார் பாடல்கள் முதல் திருவந்தாதி
  8. முதல் திருவந்தாதியின் பாடல் எண்ணிக்கை யாது? 100
  9. பொய்கையாழ்வாரும் களவழி நாற்பதைப் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றவர் யார்? மு. இராகவையங்கார்
  10. பொய்கையாழ்வார் எந்தெந்தத் தலங்களில் உறையும் திருமாலின் பெருமைகளைப் பாடுகிறார்? திருவரங்கம், திருவிண்ணகரம், திருவேங்கடம், திருவெஃகா, திருக்கோவிலூர்
  11. இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பூதத்தாழ்வார்
  12. பூதத்தாழ்வார் பெயர்க் காரணம் யாது? திருமாலை கடல் வண்ணன் பூதம், மற்த்திரு மார்பன் அவன் பூதம் எனப் பாடியமையால் பூதத்தாழ்வார் எனப்பட்டார்
  13. பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? திருக்கடல் மல்லையூர் எனப்பட்ட மாமல்லபுரம்- குருக்கத்திப் பந்தரில் குருக்கத்தி மலரில் பிறந்தார்
  14. பூதத்தாழ்வார் பிறந்த நாள் எது? ஐப்பசித் திங்கள் அவிட்டநாளில் [பொய்கையாழ்வார் பிறந்த மறுநாள்1]
  15. பூதத்தாழ்வார் எதன் அம்சமாகப் பிறந்தார்? திருமாலின் அம்சமாகத் தோன்றினார்
  16. பூதத்தாழ்வார் பாடிய தலங்கள் யாவை? திருவேங்கடம், திருவரங்கம், திருப்பாடகம், திருவத்தியூர், திருக்குடமூக்கு
  17. மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் யார்? பேயாழ்வார்
  18. பேயாழ்வார் - பெயர்க்காரணம் யாது? திருமாலின் மீது கொண்ட பக்தியால் அழுது, சிரித்து, ஆடிப்பாடி பேய்பிடித்தவர் போல் பாடியதால் பேயாழ்வார் எனப்பட்டார்.
  19. பேயாழ்வார் எங்கு பிறந்தார்? மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கிணற்றில் செவ்வல்லிப் பூவில் பிறந்தார்.
  20. பேயாழ்வார் எப்போது பிறந்தார்? ஐப்பசி மாத சதய நாள் [பூதத்தாழ்வார்]
  21. திருமாளின் வாளின் பெயர் என்ன? நாந்தகம்
  22. நாந்தகத்தின் அம்சமாகப் பிறந்தவர் யார்? பேயாழ்வார்
  23. பேயாழ்வாரின் காலம் யாது? கி.பி. ஆறாம் நூற்றாண்டு
  24. திருமாலோடு சிவனையும் இணைத்துப் பாடிய ஆழ்வார் யார்? பேயாழ்வார்
  25. திருமழிசை ஆழ்வார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டின் பூவிருந்தவல்லி அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தார்
  26. திருமழிசை ஆழ்வார் எப்போது பிறந்தார்? தைமாதம் மக நட்சத்திரம்
  27. திருமாலின் சுதர்சனச்சக்கரத்தின் அம்சமாகத் தோன்றியவர் யார்? திருமழிசை ஆழ்வார்
  28. திருமழிசை ஆழ்வாரின் வேறுபெயர் யாது? பத்திசாரர்
  29. பிற சமயத்தவரை சாடிய, வீரவைணவர் என்று அழைக்கப்பட்டவர் யார்? திருமழிசை ஆழ்வர்
  30. திருமழிசை ஆழ்வாருக்கு தத்துவ உபதேசம் செய்தவர் யார்? பேயாழ்வார்
  31. திருமழிசை ஆழ்வாரின் சீடன் யார்? கணிக்கண்ணன்
  32. திருமால் பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டது யாருடன்? திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன்
  33. நம்மாழ்வார் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூர்
  34. நம்மாழ்வாரின் பெற்றோர் யாவர்? காரியார், நங்கையார்
  35. நம்மாழ்வார் எப்போது பிறந்தார்? பிரமாதி ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்தார்
  36. ஆதிசேஷன் அவதாரமான புளியமரத்தடியில் அமர்ந்து 16 ஆண்டு தவம் செய்து இறை அருளால் பேசும் வரம் பெற்ற ஆழ்வார் யார்? நம்மாழ்வார்
  37. நம்மாழ்வார் சடகோபன் என்று அழைக்கப்படக் காரணம் யாது? சடம் என்ற வாய்வை அடக்கியதால்
  38. பிறசமயம் என்னும் யானைக்கு அங்குசமாகத் திகழ்ந்தமையால் நம்மாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்? பராங்குசர்
  39. நம்மாழ்வாரின் சிறப்புப்பெயர்கள் யாவை? சடகோபர், பராங்குசர், மாறன், திராவிடசிசு, வைணவத்து மாணிக்கவாசகர், வகுளாபரணர்
  40. ஆழ்வாரில் தலைமையானவர் யார்? நம்மாழ்வார் [ அவர் அவயவி, பிற ஆழ்வார் அவயவம்]
  41. நம்மாழ்வார் எழுதிய நூல்கள் யாவை? திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
  42. நம்மாழ்வாரின் நான்கு நூல்களும் வைணவர்களால் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? நான்கு வேதமாகப் போற்றப்படுகிறது.
  43. நம்மாழ்வார் நூல்களின் சிறப்புப் பெயர்கள் யாவை? திராவிட வேதம், செந்தமிழ் வேதம், ஆன்றதமிழ் மறைகள் ஆயிரம்
  44. தென்கலை வைணவர்கள் மந்திரமாகக் கருதுவது யாது? திருவாய் மொழி
  45. திருவாய் மொழிக்கு தத்வார்த்த விளக்க உரை எழுதியவர் யார்? பெரியவாச்சான் பிள்ளை
  46. பெரிய திருவந்தாதியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது? 87 வெண்பா
  47. திருவிருத்த பாடல் எண்ணிக்கை - 100 கட்டளைக்கலித்துறை பா
  48. திருவாசிரிய பாடல் எண்ணிக்கை - 7 ஆசிரியப்பா
  49. நம்மாழ்வாரின் காலம் யாது? கி.பி. 9 ஆம் நூற்றாண்டு

Post a Comment

Previous Post Next Post