- ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் சமண, பௌத்த சமயக் காப்பியங்கள்
- பெருங்கதை எந்த சமய காப்பியம்? சமணம்
- பெருங்கதை எக்காப்பியத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது? பிருகத்கதா [பிருகத் - பெரிய]
- பிருகத்கதா எம்மொழியில் இயற்றப்பட்டது? பைசாச
- பிருகத்கதா யாரால் இயற்றப்பட்டது? குணாட்டியார்
- பெருங்ககை எவ்வாறு அழைக்கப்படும்? உதயணன் கதை, கொங்குவேளிர் மாக்கதை
- பெருங்கதையின் காலம்? கி.பி. ஏழாம் நூற்றாண்டு
- பெருங்கதை எந்தப் பாவால் ஆனது? ஆசிரியப்பா
- முதல் சமணக் காப்பியம் எது? பெருங்கதை
- பெருங்கதையின் ஆசிரியர் யார்? கொங்குவேள் [கொங்குவேளீர்]
- பெருங்கதை எத்தனை அடிகளைக் கொண்டது? 16,230
- பெருங்கதையின் காண்டங்கள் எத்தனை? 5 [உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதக் காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம்]
- பெருங்கதையில் கிடைக்காத பகுதி யாது? உஞ்சைக் காண்டத்தில் முதல் 31 தலைப்புக்களில் உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
- பெருங்கதையில் கிளைக் கதைகள் மிகுந்துள்ளதால் அதனைக் கதைக் கடல் என்றவர் யார்? உ.வே. சாமிநாதையர்
- விம்பிசாரக்கதை எந்த சமயக் காப்பியம்? பௌத்தர்
- விம்பிசாரக் கதை யாது? கௌதம புத்தர் அருளால் பௌத்தராக மாறிய விம்பிசாரன் என்ற மகத நாட்டு மன்னனின் வரலாறு கூறும் காப்பியம்.
- ஸ்ரீபுராணம் எந்த சமய நூல்? சமண சமய நூல்
- ஸ்ரீபுராணம் எதன் மொழிபெயர்ப்பு நூலாகும்? வடமொழி மகாபுராண சங்கிரகத்தின் மொழிபெயர்ப்பு
- மேருமந்திர புராணம் எந்த சமயக் காப்பியம்? சமணம்
- மேருமந்திர புராணத்தின் ஆசிரியர்? வாமனாச்சாரியார்
- வாமனாச்சாரியார் உரை எழுதிய காப்பியம் யாது? நீலகேசி
- சமணர்களின் 'சமயச் சாரம்' என்று அழைக்கப்படும் காப்பியம்? மேருமந்திர புராணம்
- மேருமந்திர புராணம் மேரு, மந்திரா என்ற இரு உடன்பிறந்தோரின் வரலாற்றைக் கூறும்
- மேருமந்திர புராணத்தின் முதல் நூல் எது? ஸ்ரீபுராணம்
- மேருமந்திர புராணத்தின் சருக்கங்கள் எத்தனை? 13
- மேருமந்திர புராணத்தின் பாடல்கள் எத்தனை? 1405
- மேருமந்திர புராணத்தின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
- பாரத கதை கூறும் நூல்கள் யாவை? பாரத வெண்பா, நளவெண்பா, வில்லிபாரதம், நைடதம், வசு சரித்திரம், நல்லாப்பிள்ளை பாரதம், பாரதியின் பாஞ்சாலி சபதம்
- பாரத வெண்பாவின் ஆசிரியர் யார்? பெருந்தேவனார்
- பாரத வெண்பாவின் காலம் யாது? 9 ஆம் நூற்றாண்டு
- பாரத வெண்பாவில் கிடைத்துள்ள பருவங்கள் எத்தனை? 3 [உத்தியோக பருவம், பீஸ்ம பருவம், துரோண பருவம்]
- பாரத வெண்பாவில் கிடைத்துள்ள மொத்த பாடல்கள் எத்தனை? 830
- கலி ஒருவனைப் பிடித்தால் நடப்பவை எவை எனக்கூறும் காப்பியம் யாது? நளவெண்பா
- நளவெண்பாவின் ஆசிரியர் யார்? கவிச்சக்கரவர்த்தி புகழேந்திப் புலவர்
- நளவெண்பாவில் உள்ள காண்டங்கள் யாவை? 3 [சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலி நீங்கு காண்டம்]
- நளவெண்பாவில் உள்ள பாடல்கள் எத்தனை? 410
- வில்லி பாரதத்தை இயற்றியவர் யார்? வில்லி புத்தூரார்
- வில்லி புத்தூராரை ஆதரித்த மன்னன் யார்? வரபதி
- வில்லிபுத்தூரார் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
- வில்லி பாரத படலங்கள் எத்தனை? பாரத கதை முழுவதையும் பேசாமல் 18 படலங்களில் 10 படலங்கள் மட்டுமே இயற்றி உள்ளார்
- வில்லி பாரத பாடல்களின் எண்ணிக்கை யாது? 4351
- நைடதத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
- நைடதத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
- நைடதம் என்ன பாவால் ஆனது? விருத்தப்பா
- நைடதத்தில் எத்தனைப் பாடல்கள் உள்ளன? 1172
- நைடதத்தைச் சிறப்பிக்கும் பழமொழி யாது? "நைடதம் புலவர்க்கு ஔடதம்"
- வசு சரித்திரம் யாரால் இயற்றப்பட்டது? அம்பலத்தாடும் ஐயன்
- வசு சரித்திரத்தின் காலம் யாது? கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
- வசு சரித்திரத்தின் பா யாது? விருத்தப்பா
- வசு சரித்திரத்தின் படலங்கள் யாவை? 32
- வசு சரித்திரத்தின் பாடல்கள் எத்தனை? 1003
- வசு சரித்திரத்தின் மூல கதை யாது? மகாபாரதத்தின் ஆதி பருவ வசுவின் கதை
- நல்லாப்பிள்ளை பாரதத்தின் காலம் யாது? கி.பி.18ஆம் நூற்றாண்டு
- நல்லாப்பிள்ளை பாரதத்தின் வருவம் எத்தனை? 18 பருவம்
- நல்லாப்பிள்ளை பாரதத்தின் பாடல்கள் எத்தனை? 15300
- பாரதியின் பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது? 5 சருக்கம் கொண்ட குறுங்காவியம் ஆகும்
- கம்பராமாயணத்தின் காலம் யாது? 9 அல்லது 12 ஆம் நூற்றாண்டு
- கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? சடையப்ப வள்ளல்
- கம்பராமாயண பா வடிவம் யாது? மொத்தம் 8 வகை பாக்கள் கலந்தது. அவற்றில் கலிவிருத்தம் மிகுதியாக உள்ளது.
- கம்ப ராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? 6 [பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்]
- கம்பராமாயண படலங்களின் எண்ணிக்கை? 118
- கம்பராமாயண பாடல்களின் எண்ணிக்கை? 10,500
- கம்பராமாயணத்தில் பயின்றுள்ள சந்த வேறுபாடுகள் எவ்வளவு? 460
- கம்பர் எழுதிய பிற நூல்கள் யாவை? ஏர் எழுபது, திருக்கை வழக்கம், சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி [நம்மாழ்வார் குறித்த நூல்]
- கம்பரைச் சிறப்பிக்கும் சொற்றொடர்கள் யாவை? கல்வியில் பெரியவர் கம்பர், கம்பனாரிடைப் பெருமையுள்ளது, கம்பன் வீட்டுள் ஒரு சிறுபுன் கட்டுத்தறியும் கவி செய்யும், கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்.
- வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் காப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார் என்றவர் யார்? மு. இராகவையங்கார்
- கம்பராமாயணம் இலியாது, ஏனீது, துறக்கநீக்கம், மகாபாரதம் முதலானவற்றை வெல்லும் சிறப்புடையது என்பது மட்டுமன்றித் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும் என்றவர் யார்? வ.வே.சு. ஐயர்
- கம்பன்மொழி, செந்தமிழின் கவித்திறத்தின் காட்சி என்றவர் யார்? பாகவதம்
- உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை என்றவர் யார்? எஸ். மகாராஜன்
- "கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை" என்றவர் யார்? பாரதியார்
- "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" - என்றவர் யார்? பாரதியார்
- "வெய்யிற் கேற்ற நிழலுண்டு/ வீசும் தென்றல் காற்றுண்டு/ கையில் கம்பன் கவியுண்டு" - என்றவர் யார்? கவிமணி
- "விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்" என்றவர் யார்? திருத்தக்க தேவர்
- கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் யாது? இராமாவதாரம்
- கம்பராமாயணம் வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தின் தழுவல் நூலே.
- வால்மீகி எழுதாத கம்பராமாயணத்தில் உள்ள படலங்கள் யாவை? இரணியன் வதைப்படலம், மாயாசனகப் படலம்
- கம்பர் எத்தனை நாட்களில் இராமாயணத்தைப் பாடியவர் யார்? பதினைந்து நாட்கள்
- இராமாயணத்தோடு தொடர்புடைய நூட்கள் யாவை? இரகுவம்சம், இராமாயண் வெண்பா, இராவண காவியம்
- இரகுவம்சத்தின் ஆசிரியர் யார்? அரசகேசரி
- அரச கேசரி யாருடைய மகன்? இலங்கை மன்னன் பரராச்சேகரன் மகன்
- அரசகேசரியின் ஊர் எது? இலங்கையில் உள்ள நல்லூர்
- இரகுவம்சத்தின் காலம் யாது? கி.பி. 15 [அல்லது] 17 ஆம் நூற்றாண்டு
- இரகுவம்சத்தின் பாடல்கள் எத்தனை? 2500 [காப்பு - 1, பாயிரம் - 8]
- இரகுவம்சம் எதன் தழுவல் நூல்? காளிதாசர் எழுதிய இரகுவம்சம் [பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுதற்கு உரியது]
- இராமாயண் வெண்பாவின் ஆசிரியர் யார்? சுப்பிரமணிய ஐயர்.
- இரவண காவியத்தின் ஆசிரியர் யார்? புலவர் குழந்தை
- இராவண காவியம் வெளியான ஆண்டு எது? கி.பி. 1946
- அரிச்சந்திர புராணத்தின் ஆசிரியர் யார்? வீரகவிராயர்
- கூர்மபுராணம், காசிக் காண்டத்தின் ஆசிரியர் யார்? அதிவீரராம பாண்டியர்
Tags:
இலக்கிய வரலாறு