Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, September 26, 2024

குளிகை நல்ல நேரமா?.. அந்த நேரத்தில் என்ன காரியங்களை செய்யலாம்?.. செய்யக்கூடாது தெரியுமா?..




குளிகை என்பது ராகு காலம் எமகண்டம் போன்று ஒரு கிரகம் தான். ராகு காலத்தை ராகுவிற்கும் எமகண்டத்தை கேதுவிருக்கும் சொல்வது போல குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். ராகு காலம் எமகண்டம் போல ஒவ்வொரு நாளுக்கு நேரம் இருப்பது போல் குளிகையும் தினமும் ஒவ்வொரு நாழிகை நடக்கும்.

ஒரு சில காரியங்களுக்கு குளிகை நேரம் அதிர்ஷ்டமானதாகவும் நல்ல நேரமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் குளிகை நேரத்தில் நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கினால் அது மீண்டும் மீண்டும் நடந்து பெருகும் என்பது ஐதீகம். அதாவது குளிகை நேரத்தில் பொன் பொருள், வீடு, நிலம் வாங்குவது நல்லது. அப்படி செய்தால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இது தவிர குளிகை நேரத்தில் கடனை திருப்பிக் கொடுப்பது வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்தால் தொடர்ந்து அது செய்வதாக அமையும். எந்த தங்கு தடையும் இன்றி சுபமாக முடியும். குளிகை நேரத்தில் செய்யக்கூடாத காரியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் அது வளர்ந்து கொண்டே போகும் என்பதால் திருமணம் இந்த நேரத்தில் செய்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்க கூடாது. அப்படி குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இது மட்டுமல்லாமல் கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது, பெண் பார்க்க செல்வது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவைகளை குளிகை நேரத்தில் செய்வது உகந்ததல்ல. இதையெல்லாம் இந்த நேரத்தில் செய்தால் அது திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.