துத்தி இலைகள் இதய வடிவம் கொண்டவை. இதில் சிறிய மஞ்சள் நிற பூக்கள் பூக்கும். இந்த தாவரம் 2 மீட்டர் உயரம் வரை வளரும்.
துத்தி இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது என்று நம்பப்படுகிறது. துத்தி இலையைப்போல் பல்வேறு மூலிகைச் செடிகள் நமது உடலில் ஏற்படும் உபாதைகளைப் போக்குகிறது. தமிழ்நாட்டில் துத்தி இலைகள் சமைக்கப்பட்டும், பச்சையாகவும் உட்கொள்ளப்படுகிறது. மனித உடலுக்கு துத்தி இலையின் ஒவ்வொரு பாகமும் நன்மை கொடுக்கிறது. இதன் இலைகள், மலர்கள், தண்டுகள், பழங்கள் மற்றும் வேர் என அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது. துத்தி இலைகள் மலச்சிக்கலைப்போக்கும் வீட்டுத் தீர்வு ஆகும். கடற்கரையோரங்களிலும், சாலையோரங்களிலும் அதிகம் வளர்கிறது. துத்தியில் 29 வகைகள் உள்ளன. இதில் பனியார துத்தி என்பது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் கடும் வெப்பத்தில் வளர்கிறது. தென்னிந்தியா, இலங்ளை, மலேசியா மற்றும் அமெரிக்காவில் சில இடங்களில் வளர்கிறது.
மூலநோய்க்கு தீர்வு தரும் துத்தி
துத்தி இலைகள் மூலநோயை குணப்படுத்த உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் துவர்ப்பு மற்றும் கடும் சூடான, காரம் மற்றும் புளிப்பு சுவை அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் குடலில் வாயுக்களை ஏற்படுத்துகிறது. இதனால் மூலம், ரத்த மூலம் ஆகியவை ஏற்படுகிறது. அதற்கு துத்தி இலைகள் உதவுகிறது.
துத்தி இலைகளை சிறிது எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து மோரில் கலந்து, 2 - 3 நாட்கள் வெறும் வயிற்றில் பருகினால், மூலநோயால் ஏற்படும் வலி குறையும். முலநோயால் ஏற்படும் உதிரப்போக்கையும் குறைக்கும்.
விளக்கெண்ணெயில் துத்தி இலைகளை சேர்த்து சூடாக்கி, வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் அது மூலம் தரும் வீக்கத்தை குறைக்கும்.
துத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, பால் மற்றும் நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து பருகினால் அது ஆசனவாயில் ஏற்படும் எரிச்சலைப் போக்கி, மலச்சிக்கலை குணப்படுத்தும்.
துத்தி இலையின் நன்மைகள்
தசைகளுக்கு ஆரோக்கியம்
பச்சை துத்தி இலைகளை மென்று சாப்பிட்டால் அது தசைகளை வலுப்படுத்துகிறது.
ஈறுகளில் ரத்தக்கசிவு
துத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஆறியவுடன் வடிகட்டி, கொப்பளித்தால் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவைப் போக்கும்.
வெள்ளைப்படுதல்
துத்தி இலைகளை நெய்யில் வறுத்து அதை சூடான சாத்தில் சேர்த்து 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் குணமாகும்.
ரத்த வாந்தி
துத்தி இலைச்சாறு எடுத்து சர்க்கரை கலந்து பருகினால் அது ரத்த வாந்தியைப் போக்கும்.
காயங்கள் ஆற்றும்
புளியுடன் துத்தி இலைகளை அரைத்து காயத்தில் பூசினால், அது வெளிப்புற காயங்களை ஆற்றும். இதனால் புண்கள் விரைவில் குணமாகும்.
டிகாஷன்
100 மில்லி லிட்டர் தண்ணீரில் 15 கிராம் வேரை கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீர் 50 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்கவிடவேண்டும். இதை வடிகட்டி, ஆறவிடவேண்டும். இதில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து பருகினால், இந்தச்சாறு வீக்கக்த்துக்கு எதிராக செயல்புரியும்.
துத்தி இலையில் உள்ள வேறு நன்மைகள்
மருத்துவ குணங்கள் கொண்ட துத்தி இலைகள் ரத்த மூலம் மற்றும் மூல நோயை குணப்படுத்தும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு துத்தி இலைகள் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
துத்திப்பூக்கள் குழந்தை பெறமுடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
துத்தி இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
பக்கவாத நோயை குணப்படுத்துகிறது. நரம்பு மண்டலத்துக்கு சிறந்த டானிக்.
உங்களின் மூல நோய் துத்தி இலைகளால் சரியாகவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை சந்திப்பதுதான் சிறந்தது.
Tags:
உடல் நலம்