Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Sunday, September 15, 2024

பி.இ.,- பி.டெக்.,- எம்.சி.ஏ., பட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ., வங்கியில் வேலை


உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட 1511 காலி பணியிடங்களை நிரப்ப எஸ்.பி.ஐ., வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4.

எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை மேலாளர் ( ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் & டெலிவரி)- 187 

துணை மேலாளர் ( இன்ப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ்)- 412 

துணை மேலாளர் ( நெட்வொர்க்கிங் செயல்பாடுகள்)- 80 

துணை மேலாளர் ( IT, ஆர்க்கிடெக்சர் )- 27 

துணை மேலாளர் ( தகவல் பாதுகாப்பு) - 7 

உதவி மேலாளர்- 798

கல்வி தகுதி என்ன? 

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பி.இ., -பி.டெக், - எம்.எஸ்.சி., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

முன் அனுபவமும் தேவை.

வயது வரம்பு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் ரூ.750. எஸ்.சி., எஸ்.டி., பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.