யுபிஐ செயலியில் ரூ.5 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனை. நாடு முழுவதும் நாளை முதல் அமல்.!!!


நாட்டில் ஒவ்வொரு நாளும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் சுலபமாகவும் எளிதாகவும் இருப்பதால் அதனை பலரும் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் யுபிஐ பண பரிவர்த்தனைகள் மதிப்பு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. இதன் காரணமாக யுபிஐ செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு விதமான புதிய அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் யுபிஐ செயலியில் 5 லட்சம் வரையில் பணம் அனுப்பும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய அப்டேட் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. ஆனால் சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் யுபிஐ மூலமாக 5 லட்சம் வரை பணத்தினை அனுப்ப முடியும். 

அதன்படி மருத்துவமனை செலவுகள் மற்றும் கல்வி உள்ளிட்ட செலவுகளுக்கு யுபிஐ மூலமாக 5 லட்சம் வரையில் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். மேலும் இதற்கு முன்னதாக யுபிஐ உச்சவரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்போது உச்சவரம்பு 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்ட நிலையில் நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.
Previous Post Next Post