தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், கல்லூரி நூலகர், கணக்கு அலுவலர், நிதி அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு பதவிகள்)-II பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 693
அறிவிப்பு எண்: 12 2024
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மேலாளர் - 7
பணி: துணை மேலாளர் - 9
பணி: கல்லூரி நூலகர் - 17
பணி: கணக்கு அலுவலர் - 9
பணி: நிதி அலுவலர் - 6
பணி: தானியங்கி பொறியாளர் - 1
பணி: உதவி இயக்குநர் - 13
பணி: உதவி மேலாளர் - 12
பணி: கால்நடை உதவி மருத்துவர்- 31
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொது பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி ஆல் நடத்தப்படும் தமிழ் மொழித்திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முதன்மைத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு - 18.11.2024
முதன்மைத் தேர்வு - 18.11.2024 முதல் 20.11.2024 வரை நடைபெறும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.9.2024
Tags:
வேலைவாய்ப்பு