Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 19, 2024

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!


பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் செப் 5ல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த போராட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்களான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு தலா ஒரு நியாயவிலைக் கடை என சோதனை அடிப்படையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் மூலம் உணவுப் பொருள்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், எடை குறைவின்றி விரைவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமானது, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.