Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 19, 2024

ஆடுகள் வாங்கணுமா? தமிழக அரசு தரும் ரூ 15 ஆயிரம் மானியம்!




ஆடுகள் வாங்குவதற்கு ரூ 15 ஆயிரத்தை மானியமாக தமிழக அரசு வழங்குகிறது. இதன் மூலம் வேளாண் தொழில் சார்ந்தவர்கள் பலனடைவார்கள் என தெரிகிறது.

இதற்கான உத்தரவு தமிழகத்தில் தாக்கலான வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதை திமுக அரசு கொண்டு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

இந்த நிலையில் 2022 - 2023 ஆம் நிதியாண்டு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில் பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவன பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்ந்த அனைத்து வகையான பணிகளையும் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது ஊடு பயிர் அல்லது வரப்பு பயிர் சாகுபடிக்கு ரூ 5 ஆயிரம், கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ 15 ஆயிரம், 10 ஆடுகள் வாங்குவதற்கு ரூ 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் 10 கோழிகள் வாங்க ரூ 3000, இரு தேனீ பெட்டிகள் வாங்க ரூ 3,200, கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக 10 சென்ட் பரப்பில் தீவன பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ரூ 800 என 50 சதவீத மானியமாக ரூ 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், வேளாண் துறையினர் பெற்று பயனடையலாம்.