Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 19, 2024

தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு, வீடாக.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட மிக ‌ முக்கிய அறிவிப்பு..!!



தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்துவார்கள்.

இந்த பணிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்28 ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த வருடம் ஜனவரி 1 ஆம் தேதியை வாக்களிக்க தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு போட்டவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு பணிகளை எலக்சென் கமிஷன் தொடங்கியுள்ளது.

மேலும் அதன்படி இன்று முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்த்தல், முரண்பாடுகளை களைதல், புதிய போட்டோவை இணைத்தால் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கி விண்ணப்பித்தல் போன்ற பணிகளை செய்வார்கள். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.