Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

பயண இலக்கியம் வினா விடைகள்

  1. தமிழின் முதல் பயண இலக்கியம் எது? காசியாத்திரை
  2. காசியாத்திரையை இயற்றியவர் யார்? வீராசாமி
  3. காசியாத்திரை இயற்றப்பட்ட காலம் எது? 1832
  4. நரசிம்மலுநாயுடு எழுதிய பயண இலக்கியம் யாது? தேசயாத்திரை [1885]
  5. துரைசாமி மூப்பனார் இயற்றிய பயண இலக்கியம் யாது? கங்கா யாத்ராப்ரபாவம் [1887]
  6. கொ. சண்முகசுந்தர முதலியார் எழுதிய பயண இலக்கியம் எது? காசிராமேஸ்வர யாத்திரை [1903]
  7. அயல்நாட்டுப் பயணம் குறித்த முதல் பயண இலக்கியம் யாது? பிரதாப சங்கிரகம் [1986]
  8. எனது இலங்கைச் செலவு என்ற பயண இலக்கியத்தை இயற்றியவர் யார்? திரு.வி.க
  9. சி. சுப்பிரமணியன் இயற்றிய பயண இலக்கியம் யாது? நான் கண்ட சிலநாடுகள், உலகம் சுற்றினேன்
  10. க. ராசாராம் இயற்றிய பயண இலக்கியம் யாது? தென்கிழக்கு ஆசியாவில்
  11. கவியோகி சுத்தானந்த பாரதி இயற்றிய பயண இலக்கியம் யாது? நான் கண்ட ரஷ்யா
  12. சு. ந. சொக்கலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? ஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும்
  13. பாரதி இயற்றிய பயணக் கட்டுரை யாது? எங்கள் காங்கிரஸ் யாத்திரை
  14. ஏ. கே. செட்டியார் இயற்றிய பயண இலக்கியம் யாது? குடகு, அண்ணல் அடிச்சுவட்டில், தமிழ்நாடு
  15. சோமலே இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? அமெரிக்காவைப் பார், ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம், பிரயாண நினைவுகள், பிரயாணம் ஒரு கலை, இமயம் முதல் குமரி வரை, நான் கண்ட விழாக்கள், உலக நாடுகள் வரிசை, ஆப்பிரிக்க நாடுகள் வரிசை
  16. க. ப. அறவாணன் இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
  17. சாலை இளந்திரையன் இயற்றிய பயண இலக்கியம் யாது? எங்கள் பயணங்கள்
  18. எஸ். ஆர். சண்முகம் இயற்றிய பயண இலக்கியம் யாது? அதிசய நாடு அமெரிக்கா
  19. சிவசங்கரி இயற்றிய பயண இலக்கியம் யாது? அனுபவங்கள் தொடர்கின்றன
  20. மு.வ. இயற்றிய பயண இலக்கியம் யாது? யாம் கண்ட இலங்கை
  21. நடந்தாய் வாழி காவிரியை இயற்றியவர்கள் யாவர்? தி. ஜானகிராஜன், சிட்டி
  22. கேரளம் கண்டேன் இயற்றியவர் யார்? செந்தில் துறவி
  23. சாவி இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? இங்கே போயிருக்கிறீர்களா? நவகாளி யாத்திரை
  24. விக்கிரமன் இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? வாதாபி விஜயம்
  25. சிட்டி சிவபாதசுந்தரம் இயற்றிய பயண இலக்கியம் யாது? அடிச்சுவட்டில்
  26. அவிநாசிலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? திருக்கேதாரம்
  27. ராய. சொக்கலிங்கம் இயற்றிய பயண இலக்கியம் யாது? திருத்தலப் பயணம்
  28. நரசய்யா இயற்றிய பயண இலக்கியங்கள் யாவை? கடலோடியின் கம்போடியா நினைவுகள், கடலோடி, மதராசாப்பட்டினம்
  29. வாமனன் - கல்கத்தா
  30. சுப்ரபாரதி மணியன் - மண்புதிது
  31. ஈரோடு தமிழன்பன் - வால்ட்விட்மன் நேற்று உன் வீட்டிற்கு வந்திருந்தேன்
  32. கல்கி - கண்டேன் இலங்கையை
  33. தமிழ்வாணன் - சிகாகோவில் தமிழ்வாணன்
  34. குமரி அனந்தன் - உலக நாடுகள் சில குறிப்புகள்
  35. லேனா தமிழ்வாணன் - கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு, ஒரு பத்திரிகையாளனின் கீழை நாட்டு மற்றும் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்
  36. திலகபாமா - திசைகளின் தரிசனங்கள்
  37. வேங்கடம் - அடேங்கப்பா அமெரிக்கா
  38. இயேசு சுப்பிரமணி - இன்னொரு யுகசந்தி
  39. தா. பாண்டியன் - கண்டேன் சீனாவை
  40. அசலெப்பை அப்துல்லா - துபாயில் இனிய அனுபவங்கள்
  41. சௌந்தரிய நாயகி வயிரவர் - சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை
  42. வைரமுத்து - வால்காவிலிருந்து
  43. செ. மாதவன் - சில நாடுகள் சில நாட்கள்
  44. சுஜாதா - 60 அமெரிக்க நாடுகள்
  45. மணியன் - இங்கிலாந்து பேசுகிறது, இதயம் பேசுகிறது
  46. ம. பொ. சி - மலேசியாவில் ஒரு மாதம், மாஸ்கோவிலிருந்து இலண்டன் வரை, மொரிஷியஸ் தீவில் ஒருவாரம், அமெரிக்காவில் மூன்று வாரம்
  47. நிர்மலா சுரேஷ் - திசைகளின் நடுவே
  48. எஸ். ராம் கிருஷ்ணன் - அது அந்தக்காலம், வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
  49. காஞ்சனா தாமோதரன் - புல்வெளி தேசம்
  50. அ. கா. பெருமாள் - சிவாலய ஓட்டம்

No comments:

Post a Comment