Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

புகழ் பெற்ற புலவர்கள் வினா விடைகள் - 02

  1. ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்கள் யாவர்? வ்க்கிரம சோழன், இரண்டாம் குலோத்தங்கன், இரண்டாம் இராசராச சோழன்
  2. ஒட்டக்கூத்தரின் ஊர் யாது? மலரி
  3. ஒட்டக்கூத்தர் இயற்றிய பரணி? தக்கயாகப் பரணி
  4. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ்? இரண்டாம் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
  5. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிள்ளைத் தமிழ் யாது? மூவருலா
  6. ஒட்டக்கூத்தர் இயற்றிய கோவை நூல் யாது? காங்கேயன் நாலாயிரக்கோவை
  7. ஒட்டக்கூத்தரின் சமகாலப் புலவர்கள் யாவர்? கம்பர், புகழேந்திப் புலவர்
  8. ஒட்டக்கூத்தர் இயற்றிய பிற நூல்கள் யாவை? ஈட்டியெழுபது, அரும்பைத் தொள்ளாயிரம், இராமாயண உத்தர காண்டம்
  9. உத்தர காண்டம் - கம்பராமாயணத்தில் கம்பர் இயற்றாத காண்டமான உத்தர காண்டத்தை ஒட்டக்கூத்தர் இயற்றினார். இது இராமன் பட்டாபிஷேகத்திற்குப் பின் உள்ள நிகழ்வுகளைக் கூறும்.
  10. அதிவீரராம பாண்டியர் பாண்டிய அரச மரபில் தோன்றியவர்
  11. அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் யாது? அழகர் பெருமாள்
  12. அதிவீரராம பாண்டியரின் சிறப்புப் பெயர்கள் யாவை? ஸ்ரீ வல்லபன், வீரமாறன், இராமன், பிள்ளைப் பாண்டியன்
  13. அதிவீரராம பாண்டியரின் படைப்புக்கள் யாவை? நைடதம், காசிக்காண்டம், கூர்ம புராணம், இலிங்க புராணம், நறுந்தொகை, மகா புராணம், திருக்குருவை பதிற்றுப்பத்தந்தாதி
  14. நைடதம் எத்தனை பாக்களைக் கொண்டது? 1772
  15. நைடதம் எதைப் பற்றியது? நள தமயந்திக் கதையைக் கூறுவது.
  16. அதிவீரராம பாண்டியனின் மொழிபெயர்ப்பு நூல் யாது? இலிங்க புராணம்
  17. நறுந்தொகையின் வேறு பெயர் யாது? வெற்றிவேற்கை
  18. கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பட்ட நூல் எது? திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி [குட்டித் திருவாசகம்]
  19. அதிவீரராம பாண்டியரின் சகோதரரான புலவர் யார்? வரதுங்கராம பாண்டியர்
  20. வரதுங்கப்பாண்டியர் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்த நூல் எது? கொக்கோகம்
  21. வரதுங்கப்பாண்டியரின் பிற நூல் யாது? பிரம்மோத்தர காண்டம்
  22. நைடதம் 'நாய் விரைந்தோடி இளைத்தாற் போன்ற தன்மையுடைத்து' என்றவர் யார்? வரதுங்கராம பாண்டியரின் மனைவி
  23. பட்டினத்தார் பிறந்த ஊர் யாது? காவிரிபூம்பட்டினம்
  24. பட்டினத்தாரின் பெற்றோர் யாவர்? சிவநேச குப்தர், ஞானக்கலை
  25. பட்டினத்தாரின் இயற்பெயர் யாது? திருவெண்காடர்
  26. இரு பட்டிணத்தார் உண்டு என்று கூறுவது உண்டு. இரண்டாம் பட்டினத்தாரின் காலம் யாது? கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
  27. பட்டினத்தாரின் படைப்புக்கள் யாவை? கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவெர்றியூர் ஒருபா ஒருபஃது [இவ்வைந்தும் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளவை
  28. குமரகுருபரர் எங்கு பிறந்தார்? திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ வைகுண்டம்
  29. குமரகுருபரர் பெற்றோர் பெயர்? சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி
  30. பிறந்தது முதல் ஐந்தாண்டு காலம் பேசாமல் இருந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் யார்? குமரகுருபரர்
  31. பேசும் திறன் பெற்றதும் திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட யாது? கந்தர் கலிவெண்பா
  32. குமரகுருபரரின் படைப்புக்கள் யாவை? கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, பண்டார் மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலவல்லி மாலை, இரட்டை மணிமாலை, செய்யுட்கோவை
  33. குமரகுருபரர் திருமலை நாயக்கர் வேண்டுகோளுக்கு இனங்க இயற்றிய நூல் யாது? நீதிநெறி விளக்கம்
  34. குமரகுருபரரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  35. சிவப்பிரகாசரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  36. கற்பனைக் களஞ்சியம் யார்? சிவப்பிரகாசர்
  37. சிவப்பிரகாசர் ஊர் யாது? தொண்டை நாட்டு, துறை மங்கலம்
  38. சிவப்பிரகாசரின் குரு யார்? தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத் தம்பிரான்
  39. நீரோட்ட யமக அந்தாதியை இயற்றியவர் யார்? சிவப்பிரகாச சுவாமிகள்
  40. சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? திருவெங்கைக் கோவை, திருவங்கைக் கலம்பகம், நன்னெறி, நாலவர் நான்மணிமாலை, பிரபுலிங்க லீலை, நால்வர் நான்மணி மாலை
  41. வீரசைவத்தை சிறப்பித்து எழுதப்பட்ட சிவப்பிரகாசரின் காப்பியம் யாது? பிரபுலிங்க லீலை
  42. நால்வர் நான்மணி மாலை யார் குறித்தது? சைவ சமயக் குரவர் நால்வர்
  43. சிவப்பிரகாசரால் இயற்றத் தொடங்கி அவரது தம்பிகள் கருணைப் பிரகாசர், வேலைய சுவாமிகள் நிறைவு செய்த புராண நூல் யாது? திருக்காளத்திப் புராணம்
  44. சிவப்பிரகாசர் இயற்றிய நூல்கள் யாவை? 23 நூல்கள்
  45. அருணகிரிநாதர் பிறந்த ஊர் யாது? திருவண்ணாமலை
  46. அருணகிரிநாதரைத் தாயுமானவர் எவ்வாறு அழைத்தார்? கருணைக்கு அருணகிரி, வாக்கிற்கு அருணகிரி
  47. அருணகிரி நாதருக்கு முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட வார்த்தை யாது? முத்தைத்தரு பத்தித்திருநகை [திருப்புகழ்]
  48. திருப்புகழில் இடம்பெற்ற பாடல்கள் எத்தனை? 1307 [16000 பாடல்கள் இயற்றியதாகக் கூறுவர்]
  49. திருப்புகழில் கலந்துள்ள முகமதிய சொற்கள் யாவை? சலாம், சபாஸ், ராவுத்தன்
  50. திருப்புகழில் இடம்பெற்றுள்ள சந்த வேறுபாடுகள் எத்தனை? 1088
  51. அருணகிரிநாதரின் காலம் யாது? கி.பி. 15 ஆம் நூற்றாண்டு [முற்பகுதி]
  52. அருணகிரி நாதரின் படைப்புகள் யாவை? கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல்விருத்தம், மயில் விருத்தம், கந்தர் அநுபூதி
  53. சைவ சமய மந்திர நூலாகக் கருதப்படும் நூல் யாது? திருவகுப்பு
  54. திருவகுப்பில் இடம் பெற்ற வகுப்புகளும், சந்த விருத்தங்களும் எத்தனை? 18

No comments:

Post a Comment