புகழ் பெற்றப் புலவர்கள் வினா விடைகள் - 01

  1. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் எங்கு பிறந்தார்? ஆழ்வார் திருநகரி
  2. திருக்குருகைப் பெருமாள் கவிராயர் இயற்றிய இலக்கண நூல்கள்? மாறன் அகப்பொருள், மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம்
  3. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் படைப்புக்கள் யாவை? குருமகாத்கியம், திருப்பதிக்கோவை, கிளவி மணிமாலை, நம்பெருமாள் மும்மணிக்கோவை
  4. திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் காலம் யாது? கி.பி. 16ஆம் நூற்.
  5. அந்தகக்கவி வீரராகவ முதலியார் எங்கு பிறந்தார்? தொண்டை நாட்டுக் களத்தூர்
  6. அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்.
  7. அந்தகக்கவி வீரராகவ முதலியார் வசைபாடுவதில் வல்லவர்
  8. அந்தகக்கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல் திரட்டில் எத்தனைப் பாடல்கள் பாடியுள்ளார்? 20
  9. அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் படைப்புக்கள் யாவை? சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்ற மாலை, திருக்கழுக்குன்றப் புராணம், சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா
  10. வீரகவிராயர் எங்கு பிறந்தார்? பாண்டிய நாட்டு நல்லூர்
  11. வீரகவிராயர் இயற்றிய புராணம் யாது? அரிச்சந்திர புராணம்
  12. அரிச்சந்திர புராணத்திற்கு முதல் நூலாக இருந்தவை யாவை? அரிச்சந்திர வெண்பா, அரிச்சந்திர சரிதம்
  13. அரிச்சந்திர புராணம் இயற்றப்பட்ட காலம் யாது? கி.பி. 1524ஆம் ஆண்டு
  14. அரிச்சந்திர புராண காண்டங்கள் எத்தனை? 10 காண்டம்
  15. அரிச்சந்திர புராண பாடல்கள் எத்தனை? 1225 செய்யுட்கள்
  16. முனைப்பாடியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்? சமணம்
  17. முனைப்பாடியார் இயற்றிய அறநூல் யாது? அருங்கலச் செப்பு
  18. அருங்கலச்செப்பு எப்பொருளைப் பேசுகிறது? காட்சி, ஒழுக்கம், ஞானம்
  19. அருங்கலச்செப்பு எத்தனைப் பாக்களைக் கொண்டது? 222
  20. அருகனை சிவன் என்று கூறும் புலவர் யார்? முனைப்பாடியார்
  21. முனைப்பாடியாரின் காலம் யாது? கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
  22. கவிராட்சதர் எனப்படும் புலவர் யார்? கச்சியப்ப முனிவர்
  23. கச்சியப்ப முனிவர் இயற்றிய நூல்கள் யாவை? விநாயக புராணம், தணிகைப் புராணம்
  24. கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எங்கு பிறந்தார்? கும்பகோணம் மாவட்ட கொட்டையூர்
  25. சிவக்கொழுந்து தேசிகரின் காலம் யாது? கி.பி. 19ஆம் நூற்றாண்டு
  26. சிவக்கொழுந்து தேசிகரின் தந்தை யார்? தண்டபாணி தேசிகர்
  27. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்தவர் யார்? தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் [அவரது அவைக்களப் புலவராக இருந்தார்]
  28. சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய நூல்கள் யாவை? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம், திருவிடைமருதூர் புராணாம், திருமறை நல்லூர் புராணம், கொட்டையூர் உலா, கோடீச்சுரக் கோவை
  29. தஞ்சைக் கோயில் அஷ்டக்கொடி விழாவில் நடைபெறும் நாடகம் யாது? சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கவிதை நாடகம் [இது அஷ்டக்கொடிக் குறவஞ்சி எனப்படும்]
  30. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எங்கு பிறந்தார்? திருவரங்கம்
  31. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் எவ்வாறு அழைக்கப்படும்? அஷ்டப் பிரபந்தம்
  32. அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள இலக்கியங்கள் யாவை? திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து அந்தாதி, அழகர் அந்தாதி, திருவேங்கட அந்தாதி, திருப்பதி அந்தாதி, திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்து ஊசல்
  33. அஷ்டப்பிரபந்தத்தில் உள்ள செய்யுள்கள் எத்தனை? 790
  34. அஷ்டப்பிரபந்தத்தில் பாடப்படுபவை யாவை? திருமாலின் சிறப்பு, 108 திருப்பதிகள்
  35. படிக்காசுப் புலவர் எங்கு பிறந்தார்? தொண்டை மண்டலக் களத்தூர்
  36. படிக்காசுப் புலவரின் வேறு பெயர் யாது? படிக்காசுத் தம்பிரான்
  37. படிக்காசுப் புலவர் எங்கு அரசவைக் கவிஞராக இருந்தார்? இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் அரசவைக் கவிஞர்
  38. படிக்காசுப் புலவரை ஆதரித்தவர் யார்? வள்ளல் சீதக்காதி
  39. படிக்காசுப் புலவரின் படைப்புக்கள் யாவை? தொண்டைமண்டலச் சதகம், சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ், புள்ளிருக்கு வேளுர்க் கலம்பகம், பாம்பலங்காரர் வருக்கக் கோவை, உமைப்பாகர் பதிகம்
  40. படிக்காசுப் புலவரை தனிப்பாடல் எவ்வாறு பாராட்டுகிறது? "பண்பாகப் பகர் சந்தம் படிக்காசு"
  41. படிக்காசுப் புலவரின் காலம் யாது? கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
  42. இராமச்சந்திர கவிராயரின் காலம் யாது? கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
  43. இராமச்சந்திர கவிராயரின் படைப்புக்கள் யாவை? பாரத விலாசம், சகுந்தலை நாடகம், தாருக விலாசகம்
  44. நல்லாப்பிள்ளையின் படைப்புக்கள் யாவை? நல்லாபிள்ளை பாரதம், தேவயானைப் புராணம்
  45. நிரம்பவழகிய தேசிகரின் படைப்புக்கள் யாவை? சேதுபுராணம், திருவருட்பயன் உரை, திருப்பரங்க்கிரிப் புராணம், குருஞானசம்பந்தர் மாலை, சிவஞான சித்தியார் சுபக்க உரை
  46. நிரம்பவழகிய தேசிகரின் ஒருசாலை மாணாக்கர் யார்? பரஞ்சோதி முனிவர்
  47. நிரம்பவழகிய தேசிகரின் ஆசிரியர் யார்? கமலை ஞானப்பிரகாசம்
  48. நிரம்பவழகிய தேசிகரின் மாணவர்கள் யாவர்? அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர்
  49. கடிகைமுத்துப் புலவரின் படைப்புக்கள் யாவை? சமுத்திர விலாசம், காமரசமஞ்சரி, மதனவித்தார மாலை
  50. கடிகைமுத்துப் புலவரின் சீடர் யார்? உமறுபுலவர்
  51. அபிராமிப்பட்டரின் படைப்பு யாது? அபிராமி அந்தாதி
  52. சீர்காழி அருணாசலக் கவிராயர் படைப்புக்கள் யாவை? சீர்காழித் தலபுராணம், சீர்காழிக்கோவை, சீர்காழிப் பள்ளு, அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம், இராமநாடக்க் கீர்த்தனை

Post a Comment

Previous Post Next Post