Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 5, 2023

மாணவர்களுக்கு குட் நியூஸ் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தலைநரகர் சென்னை மழை நீரில் மிதந்து வருகிறது. புயல் சென்னையை தாக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவை அதன் திசையில் இருந்து மாறிவிட்டது. இந்த புயலால் கடந்த சில தினங்களாக சென்னையை கனமழை பதம் பார்த்து வருகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

கடல் சீற்றத்தால் ஆற்று வெள்ளத்தை கடல் உள்வாங்கவில்லை இதனால் மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

தொடர் மழை காரணமாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ள நீர் வடியாத காரணத்தினாலும் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. 

ஏற்கனவே சில தினங்களாக இந்த மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விடுமுறை நாளை வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment