உடலில் உள்ள 1000 நோய்களுக்கு இந்த ஒரு சூரணத்தில் தீர்வு இருக்கிறது!!

இன்றைய நவீன கால உணவு மற்றும் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

ஆரோக்கியமற்ற உணவு, முறையற்ற தூக்கம், வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதற்கு அதிக மருத்துவ குணம் கொண்ட பொருட்களை பயன்படுத்தி சூரணம் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும். இந்த சூரணத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பருகலாம். குழந்தைகளுக்கு பெரியவர்கள் அளவில் பாதி கொடுத்தால் போதும்.

தேவையான பொருட்கள்

*சீரகம் - 4 தேக்கரண்டி

*ஓமம் - 3 தேக்கரண்டி

*இலவங்கம் - 1 தேக்கரண்டி

*மிளகு - 3 தேக்கரண்டி

*பெருஞ்சீரகம் - 3 தேக்கரண்டி

*பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி

நெல்லிக்காய்ப்பொடி - 1 தேக்கரண்டி

இந்துப்பு - 1 தேக்கரண்டி

சுக்குப்பொடி - 2 தேக்கரண்டி

செய்முறை…

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சீரகம், ஓமம், இலவங்கம், மிளகு, பெருஞ்சீரகம் அனைத்தையும் தனித்தனியாக நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

பின்னர் அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

பிறகு அதில் பெருங்காயப் பொடி, இந்துப்பு, சுக்குப் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள நன்றாக கலந்துகொள்ளவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் அடைத்து வைத்துவிடவேண்டும்.

பின்னர் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் சூரணத்தை சேர்த்து பருகவும். இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் உடலுக்கு முழு ஆரோக்கியம் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post