அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 300 உதவியாளர் காலியிடங்கள்

இந்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance) பல்வேறு காலியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆள்சேர்க்கை மூலம் கிட்டத்தட்ட 300 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 300 உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்காலிக மானது தான் என்றும், நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ குறையவோ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்க உள்ள உள்ளூர்/பிராந்திய மொழியில் பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

காலியிடங்களுக்கான வயது வரம்பு, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சம்பள அளவு: ஆரம்ப நிலை ஊதியமாக மாதம் ஒன்றுக்கு Rs.37,000/- வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30.09.2023 அன்று 21- 30 க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடஒதுக்கீடு: இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்

முக்கியமான நாட்கள்: இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் 2024 ஜனவரி 16-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும் . ஒருமுறை விண்ணப்ப கட்டணம் செலுத்தபட்டு விட்டால் எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்பித்தரபடமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் பூரணமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, ஆள்சேர்ப்பு, நடைமுறை, தேர்வு மற்றும் சம்பளம் & அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு uiic.co.in ஆள்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள், எதிர்வரும் 16ம் தேதிமுதல் uiic.co.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post