Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 15, 2023

இந்தியன் ஆயுள் நிறுவனத்தில் 1816 காலியிடங்கள்

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) பல்வேறு தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள் :

தொழில்நுட்பம் சார்ந்த டிப்ளமோ தொழிற் பழகுநர் (Technician Diploma Apprentice), ஐடிஐ தொழிற்பழகுநர் (Trande Apprentices), பட்டப்படிப்பு தொழிற்பழகுநர் ஆகிய மூன்று வகைமையின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஐடிஐ (Trade apprentices), டிப்ளமோ (Technician Diploma Apprentice) அல்லது பட்டப்படிப்பு (Graduate Apprentice) முடித்துள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஆள்சேர்க்கையில் பங்கேற்கலாம்.

இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 1816 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 30 காலியிடங்கள் உள்ளன.


ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, பயிற்சி காலம், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கியமான நாட்கள்:

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும் நாள்: 2023 டிசம்பர், 16ம் தேதி மாலை 5 மணி முதல்

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2024 ஜனவரி , 5ம் தேதி மாலை 5 மணி வரை

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும் .

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம் : ஓராண்டு

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 30.11.2023 அன்று 18 -24-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

No comments:

Post a Comment