Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, December 15, 2023

வங்கியில் 5,280 காலியிடங்கள்: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு


வட்டார அளவில் உள்ள அதிகாரி (RECRUITMENT OF CIRCLE BASED OFFICERS) காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 17ம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கி (SBI) நீட்டித்துள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 5,280

சென்னை வட்டத்தில் மட்டும் 125 காலியிடங்கள் உள்ளன. இதில், பொது பிரிவினருக்கு 53 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 12 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33 இடங்களும், பட்டியல் இனத்தவருக்கு 18 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு வட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 31.10.2023 அன்றைய தேதியில், ஏதேனும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் (Scheduled Commercial Banks) 2 ஆண்டுகள் பணி செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.10.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

ஊதியம்: ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 36,000/ வரை பெறலாம்.

உள்ளூர் மொழி: விண்ணப்பதாரர் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அந்தந்த வட்டார அளவில் பேசப்படும் உள்ளூர் மொழியை பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

தெரிவு முறை (Selection Procedure ) : ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Objective Test), ஆங்கிலத் திறனை சோதிக்கும் பேப்பர்/பேனா முறை விரிவான எழுத்துத் தேர்வு (Descriptive test)/ நேர்காணல் தேர்வு ஆகிய மூன்று நிலையில் தெரிவு முறை இருக்கும்.


அந்தந்த வட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழிகளை பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். இறுதி பட்டியலில் இடம் பெற்ற மொழி அறிவு (Language Proficiency Test) சோதனை நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் உறுதி செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?https://bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யுவம்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 750/- ஆகும். இடுப்பினும், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.