கிராமப்புற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நிலக்கடலையில் மாங்கனிசு சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள மாவு சத்து மற்றும் கொழுப்புகள் உடலின் மாற்றத்தில் முக்கிய பங்கு வைக்கிறது.
அதிலும் குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் துறை நோய் வராமல் தடுத்து உடலை பாதுகாக்கிறது.
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என கூறப்படுகிறது.
நிலக்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. மேலும் உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். மேலும் இது இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

குறிப்பாக நிலக்கடலை இளமையாக இருக்க உதவுகிறது. அதன்படி நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய் ஏற்படுவதை தடுப்பதுடன் இளமையாக இருக்க உதவுகிறது.
நிலக்கடலை சாப்பிடுவதால் மூளை வளர்ச்சிக்கு நல்ல பலன் கொடுக்கிறது. மேலும் இது மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் நல்ல பலன் அளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக வைக்க உதவுகிறது.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நினைத்திருப்போம். ஆனால் அதற்கு மாறாக நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்பை சரி செய்யும் சத்து உள்ளது.
No comments:
Post a Comment