Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 21, 2023

நிலக்கடலை மிட்டாய் நாள்தோறும் 50 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்...


நிலக்கடலைகடலை மிட்டாயின் மருத்துவ குணங்கள்:நிலக்கடலை மிட்டாய் நாள்தோறும் 50 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை மிட்டாய் சாப்பிடலாம்.
இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
மன அழுத்தத்தைப் போக்குகிறது.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது.
இது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக்.
இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
இறைச்சி உண்ணாமல் தவிர்க்கும் நபர்கள் கண்டிப்பாக கடலைமிட்டாய் தங்கள் உணவு பழக்கங்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பெண்கள் கடலை மிட்டாய் சாப்பிடுவதன் மூலம் கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை சீராக செயல்படுவதற்கு இது உதவும்.
பெண்கள் கடலைமிட்டாய் சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை கட்டிகள் நீர்க்கட்டிகள் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.
உணவு சாப்பிட்டபின் கடலை மிட்டாய் எடுத்துக் கொண்டால் இதன் மூலமாக சுரக்கும் உமிழ்நீர் செரிமான பிரச்சனை இல்லாமல் உடலை சீராக வைத்திருக்கும்.
சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் தவிர குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடலை மிட்டாய் தங்கள் விருப்ப உணவாக எடுத்துக்கொள்வது மிக சிறந்தது.
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

எள்ளுமிட்டாய் மருத்து குணங்கள்:

●எள் அளவில் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் அதன் நன்மைகள் மிக அதிகம

●எள்ளு மிட்டாய் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.

●மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும்.

●எள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 50 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

●உடல் ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளை சாப்பிட்டால் உடல் பருமனை அதிகரிக்கலாம்.

●உடல் மெலிந்து போய் காணப்படுபவர்கள் எள் சாப்பிடுவதால் குண்டாகலாம்

●ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது

●இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் எள்ளை பித்த உடல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.

தீங்கிழைக்காத பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து உடல் ஆரோக்கியத்தினை மேலோங்கச்செய்யுங்கள்..

No comments:

Post a Comment