Tuesday, August 22, 2023

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 122 பேர் மறுப்பு

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை, 122 பேர் புறக்கணித்துஉள்ளனர்.அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 181 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 637 முதுநிலை ஆசிரியர்கள் அடங்கிய முன்னுரிமை பட்டியல் தயாரானது.

இதற்கான கவுன்சிலிங் கடந்த 18, 19, 20ம் தேதிகளில் நடந்தது. அதில், 697 பேர் தங்களுக்கான பள்ளிகளை தேர்வு செய்தனர். 122 பேர் பதவி உயர்வு வேண்டாம் என, புறக்கணித்து விட்டனர்; இவர்களில், 40 பேர் ஆசிரியைகள்.பதவி உயர்வில், பணப்பலன் மற்றும் சலுகைகள் இருந்தாலும், இடமாறுதல் மற்றும் கூடுதல் பொறுப்புகளுக்கு தயங்கி புறக்கணித்துள்ளனர். 

கவுன்சிலிங் முடிந்த நிலையில், ராணிப்பேட்டை, 13; திருவண்ணாமலை, 12; விழுப்புரம், 6; நாகை மற்றும் நீலகிரி தலா, 5; கள்ளக்குறிச்சி, 3 மற்றும் வேலுார், 1 என 45 மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 150க்கும் மேற்பட்ட உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாகியுள்ளன. அவை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வில் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News