Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 21, 2023

வீட்டில் செல்வம் செழிக்க மகாலட்சுமி இப்படி மட்டும் வணங்கி பாருங்கள்!

ஆவணி மாதம் வரும் அஷ்டமியில் விரதமிருந்து மகாலட்சுமியை வணங்குவது மிகவும் சிறப்பானது. எல்லாவிதமான நன்மைகளும் அந்த நாளில் கிடைக்கும்.

பணத்தை பயன்படுத்தும்போதெல்லாம் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம" என்று சொல்லினால் நம்மிடம் பணம் நிலைத்து நிற்கும்.

சிறு வயதிலேயே துறவு பூண்டவர் ஆதிசங்கரர், துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்து கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி யாசகம் வாங்க அவர் சென்ற வீடு ஏழை பிராமணர் சோமதேவர் என்பவரின் வீடு. ஆதிசங்கரர் சென்ற சமயம் சோமதேவர் வீட்டில் இல்லை. வீட்டின்முன் நின்ற ஆதி சங்கரரை பார்த்த சோமதேவர் மனைவியான தர்மசீலை "பவதி பிசோந்தேஷி!" என்றார்.

அதாவது, வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூறுவதில் தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தபோதிலும், வேறு வழியில்லாமல் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

அதைக்கேட்ட சங்கரர் "அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்" என்றார்.

வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை. எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது. அதை கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.

அதை பெற்றுக்கொண்ட பின் "அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்" என்றார் சங்கரர். இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

அவ்வளவுத்தான். வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின. "கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்" என்பது திருமகள் வாக்கு ஆக உள்ளது.

No comments:

Post a Comment