Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 21, 2023

சொப்பனத்தில் கடவுள் உருவம் வந்தால் இத்தனை அர்த்தங்கள் உள்ளதா?

கனவுகளில் வரும் ஒவ்வொரு விஷயங்களுக்கும், நிகழ்வுகளுக்கு பின்னணியில் பல்வேறு அர்த்தங்களை கொண்டிருக்கிறது கனவு சாஸ்திரம்.

அந்த வகையில் கடவுளின் உருவங்கள், அவதாரங்கள், ஏன் கடவுள்கள் இல்லாமல் எமன் வந்தால் கூட அதற்கென அர்த்தங்கள் கனவு சாஸ்திரத்தில் உள்ளன. உங்களது சொப்பனத்தில் கடவுள்கள் வந்தால் அதற்கான காரணமாக கனவு சாஸ்திரம் கூறுவதை பார்க்கலாம்.

உங்கள் கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம்?

சொப்பனத்தில் விநாயகர் வருவது நின்று போன வேலைகள் தொடருவதன் அறிகுறியை உணர்த்துவதாக உள்ளது. வீட்டில் ஏதும் சுபகாரியம் நடக்கும் என்பதை குறிக்க விநாயகர் வருவார் என கூறப்படுகிறது. விநாயகர் வருவதன் மூலம் வீட்டில் மிகழ்ச்சி தங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவில் துர்கா வந்தால் என்ன அர்த்தம்?

துர்கை அம்மன கனவில் வருவதன் மூலம் உங்கள் உடலில் இருந்து நோய் நொடிகள் நீங்கும் என்பது பொருளாகும். அதேபோல் வீட்டில் யாரேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அவர குணமடைவார் என்ற செய்தியை சொல்லும் விதமாக துர்கை அம்மன் வருவது என்பது பொருளாகிறது

ராமர் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

உங்கள் கனவில் ராமர் அல்லது விஷ்ணு வந்தால் நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள் என்பது பொருளும். நீண்ட நாள் முயற்சி வெற்றியில் முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் ராமர், விஷ்ணு கனவில் தோன்றுவார்கள் என கூறப்படுகிறது

ஹனுமன் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

உங்களது கனவில் ஹனுமனை கண்டால், எதிரிகளை சூழ்ச்சியை முறியடிப்பீர்கள் என்பது பொருளாகும். நல்லதை நோக்கி பயணிக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது. ஹனுமனின் ஆசி உங்களுக்கு உள்ளது என்பதையும் குறிக்கிறது

எமன் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது தான் பெருபாலும் எமன் கனவில் வருவார் என கூறப்படுகிறது. இந்த கனவு மங்கலகரமானது மட்டுமல்லாலம், உங்கள் வாழ்வில் நீண்ட காலமாக இருந்து வந்த நெருக்கடிகள் நீங்குவதை குறிப்பதாகும். உங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரிஇல்லாமல் இருந்தால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்பதையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment