TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 03

1. தொல்பொருள் சான்றுகள் எத்தனை வகைப்படும்
  • அ) 4
  • ஆ) 5
  • இ) 3✔
  • ஈ) 2
2. மிளகை இந்திய மருந்து என்று கூறியவர்
  • அ) சாக்ரடீஸ்
  • ஆ) ஹிப்பாகிரேட்டஸ்✔
  • இ) அலெக்சாண்டர்
  • ஈ) தாலமி
3. கீழ்கண்டவற்றில் பொருந்தாதது 
  1. நாகப்பட்டினத்தை - நிகாமா 
  2. காவிரப்பூம்பட்டினம் - கமரா 
  3. புதுச்சேரி - பொதுகே 
  4. மரக்காணம் - சோபட்மா 
  5. மசூலிப்பட்டினம் - மசூலியா
  • அனைத்தும் சரி
  • 4 மட்டும் தவறு
  • 1 4 தவறு
  • 1 5 தவறு✔
4. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முசிரிஸ் என்றும், பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் குறிப்பிட்டவர்கள்
  • அ) ரோமர்கள்✔
  • ஆ) கிரேக்கர்கள்
  • இ) ஈரானியர்கள்
  • ஈ) எகிப்தியர்கள்
5. பொருத்துக ( தமிழ் -கிரேக்கம் )
  1. அரிசி - கார்ப்பியன் 
  2. கருவா இலவங்கம் - அரிஸா 
  3. இஞ்சிவோர் - பெர்ப்பெரியாகவும் 
  4. பிப்பாலி - சின்ஞிபேராஸ்
  • 4 3 2 1
  • 2 14 3✔
  • 1 2 3 4
  • 3 4 1 2
6. கிரேக்கர்கள், தமிழகத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த ஆண்டு
  • பொ.ஆ.மு 5✔
  • பொ.ஆ.பி. 5
  • பொ.ஆ.மு.6
  • பொ.ஆ.பி.6
7. பெரிபுளுஸ் என்று நூலில் குறிப்பிடப்படும் துறைமுகம்
  • சோழர்
  • சேரர்கள்✔
  • பாண்டியர்கள்
  • பல்லவர்கள்
8. பண்டைய தமிழகத்தின் கடல்வணிகம் பற்றிக் குறிப்பிடாத நூல்
  • அ) ஸ்டிராபோ-பூகோள நூல்
  • ஆ) பிளிளி-உயிரியல் நூல்
  • இ) தாலமி- பூகோன நூல
  • ஈ) ஆரியப்ட்ட-வானியல்✔
9. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எரித்யக் கடலின் பெரிபுளூஸ் என்னும் நூலின் பதிப்புரையில், கிரேக்க மக்கள் நாகரிக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே. இந்தியா எந்த நாடுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன.
  • அ) ரோமாபுரி
  • ஆ) எகிப்து✔
  • இ) ஐரோப்பியா
  • ஈ) ஈரான்
10. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க 
  1. தமிழர் ஆட்சி முறை, ஆடல்பாடல், கலைவளம் மற்றும் புகார், மதுரை, வஞ்சி ஆகிய தலைநகரங்களின் சிறப்புகள், வணிகச்சிறப்பு, சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், தனிமனித ஒழுக்கம், நீதி வழங்கும் முறையை ஆகியவை பற்றி விரிவாகப் பேசும் நூல் மணிமேகலை ஆகும். 
  2. சமய அறக் கருத்துகளையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் நூல்- சிலப்பதிகாரம் 
  3. பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்தமுடியும் என்பது மணிமேகலையிள் மைய கருத்தாகும். 
  4. பசியைப் பிணியாக உருவகம் செய்து, அதைப் போக்கவேண்டிய அவசியத்தையும் கூறுகின்ற புரட்சிக் காப்பியம் மணிமேகலையாகும்.
  • அ) அனைத்தும் சரி
  • ஆ) 3,4 தவறு
  • இ) 1.2 தவறு✔
  • ஈ) அனைத்தும் தவறு

Post a Comment

Previous Post Next Post