Tnpsc Group 2 & 2A Unit 8 & 9 Question Answer - 02

1. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.

கூற்று 1 : முதல் பராந்தகச்சோழனின் இளைய மகன் இராஜாதித்த சோழன் . இவர் ப தக்கோலம் போரில் வீரமரணமடைந்தார். 

கூற்று  2: இராஷ்டிர கூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ஆவர்.
  • 1 சரி 2 தவறு
  • 1 தவறு 2 சரி
  • 1,2 சரி
  • 1,2 தவறு
2. சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனுடைய கடற்படையை முறியடித்தவர்?
  • குஞ்சரமல்லன்
  • அரிஞ்சயன்
  • சிவபாதசேகரன்
  • பண்டித சோழன்
3. நாடு வகை செல்வார் என அழைக்கப்படும் அதிகாரி?
  • நாட்டின் அமைதியை நிலை நாட்டுபவர்
  • அரசின் ஆணைகளை வெளியிடுபவர்
  • விளை நிலத்தின் தரத்தைப் பிரிப்பவர்
  • அரண்மனைக் கணக்காளர்
4. சுங்கம் தவிர்த்த சோழன் எனப் போற்றப்படுபவர் யார்?
  • மூன்றாம் இராஜேந்திரன்
  • மூன்றாம் குலோத்துங்கன்
  • முதலாம் குலோத்துங்கன்✔
  • இரண்டாம் குலோத்துங்கன்
5. திருப்புறம்பியம் போர்(கி.பி 879): 
  1. இது பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடைபெற்ற போர். 
  2. இப்போரில் பல்லவர்களின் வெற்றிக்கு காரணமானவர் வயது முதிர்ந்த கால்கள் செயலிழந்த விஜயாலய சோழன் ஆவார். 
  3. இப்போரில் கலந்துக் கொண்ட பாண்டிய மன்னன் முதலாம் வரகுணவர்மன் ஆவார்.
  • 1,2 சரி 3 தவறு
  • 2 தவறு 1,3 சரி
  • 2,3 சரி 1 தவறு
  • அனைத்தும் சரி
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: சோழன் ஆட்சி முறை 
  1. மாமல்லபுரம் "மாநகரம்" என்ற குழுவால் முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் நிர்வகிக்கப்பட்டது. 
  2. "மூன்று கை மகாசேனை" என்ற சிறப்பு படை முதலாம் இராசாதிராசன், முதலாம் ராஜேந்திரன் காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வெற்றிகளை பெற்றுத் தந்தது. 
  3. " புறவு வரித்திணைக்கள நாயகம்" என்பவர் நில வருவாய் நிர்வாகத்துக்கெனத் தனியாக ஒரு துறை தலைவர் ஆவார். 
  4. "இறை கட்டின நெல்லு" என அழைக்கப்படுவது விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி ஆகும்.
  • 1,2,3 சரி 4 தவறு
  • 2,3,4 சரி 1 தவறு
  • 1,3,4 சரி 2 தவறு
  • 1,2,4 சரி 3 தவறு
7. Glimpses of world History என்ற நூலை எழுதியவர்?
  • மகாத்மா காந்தி B) C) D)
  • ஜவஹர்லால் நேரு
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  • B.R.அம்பேத்கார்
8. கீழ்க்காண்பனவற்றுள் தவறானதை தேர்ந்தெடு: 
  1. கச்சியப்ப சிவாச்சாரியார்-கந்தபுராணம் 
  2. வாகீச முனிவர் -ஞானமிர்தம் 
  3. அருள் நந்தி சிவாச்சாரியார் -சிவஞானபேதம் 
  4. உமாபதி சிவாச்சாரியார்-சிவஞான சித்தியார்
  • 1,3
  • 2,3
  • 3,4
  • 1,4
9. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்: 
  1. சோழர்கால கட்டிடக் கலையின் முதிர்ச்சியை வெளிப்படுத்தி கட்டிடக் கலையின் மணி மகுடமாகத் திகழ்கிறது. 
  2. இது தென்னகத்தின் இமயமலை என்று அழைக்கப்படுகிறது. 
  3. தொடக்கத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், தஞ்சை பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. 
  4. கோவிலின் 1000-வது ஆண்டு விழா 2010 செப்படம்பர் 25 அன்று தமிழக அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • 1,3,4 சரி
  • 2,3,4 சரி
  • 1,2,3 சரி
  • அனைத்தும் சரி
10. பொருத்துக: 
  1. அதிட்டானம் - கால் 
  2. பிரஸ்தரம்-மகுடம் 
  3. ஸ்தூபி-தோள் 
  4. பித்தி-பாதம்
  • 4 1 3 2
  • 4 3 1 2
  • 3 4 1 2
  • 4 3 2 1
Previous Post Next Post