1. கட்டிடக்கலையின் உச்ச கட்டம் என போற்றப்படும் கோயில்களுள் அல்லாதது?
- தஞ்சை பிரகதீஸ்வர் கோயில்
- கங்கை கொண்ட சோழபுரம்
- திருக்கட்டளை - சுந்தரேஸ்வரர் கோவில்
- திரிபுவனம் - கம்பகரேசுவரர் கோவில்
2. நாகரம், திராவிடம், வேசரம் ஆகிய மூன்று கலைபாணிகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ள கோவில்?
- தஞ்சை பிரகதீஸ்வரகோவில்
- தாராசுரம் - ஐராவதேஸ்வரர் கோவில்
- திரிபுவனம் - கம்பகரேசுவர் கோவில்
- கங்கை கொண்ட சோழபுரம்
3. செப்பு திருமேனிகளின் பொற்காலம் என அழைக்கப்படும் காலம்?
- பல்லவர்களின் காலம்
- சேரர்களின் காலம்
- சோழர்களின் காலம்
- பாண்டியர்களின் காலம்
4. நிருத்யம், கர்ணம் போன்ற நடன நிலைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ள கோவில்?
- கங்கைகொண்ட சோழபுரம்
- கொடும்பலூர் மூவர் கோவில்
- நார்த்தாமலைக் கோவில்
- தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
5. கூற்று A : மெய்க்கீர்த்தி என்பது அரசனின் புகழுக்குரிய சாதனைகளை விளக்கிக் கூறும் ஆவணமாகும்.
காரணம் R : இவை மன்னர் அருள்மொழி வர்மன் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. இவருக்குப் பின் வந்த சோழ மன்னர்கள், தங்கள் சாதனைகளைக் குறிப்பிடும் அரச ஆவணமாக இவற்றை உருவாக்கினர்கள்.
- கூற்று (A) காரணம்(R) இரண்டும் சரி,மேலும் (R),(A)விற்கு சரியான விளக்கமல்ல
- கூற்று (A) காரணம்(R) இரண்டும் சரி,மேலும் (R),(A)விற்கு சரியான விளக்கமாகும்.
- கூற்று (A) சரி காரணம்(R) தவறு
- கூற்று (A) காரணம் (R) இரண்டும் தவறு
6. பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
- தமிழ்நாட்டின் தலாவருமானம்,2018 ல் உள்ள புள்ளி விவரங்களின் படி இந்திய அளவை விட 2.75 மடங்கு அதிகமாக உள்ளது.
- தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 2200 டாலர்கள் ஆகும்.
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1,2 சரி
- கூற்று 1,2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
7. பின்வரும் மாவட்டங்களை மனித மேம்பாட்டு குறியீட்டு அட்டவணைப்படி முதல் 3 இடங்களை வரிசைப்படுத்துக.
- விருதுநகர், சென்னை ,கன்னியாகுமரி
- கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்
- கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி
- கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி
8. பாலின சமமின்மை குறியீடு பற்றிய கூற்றுகளை ஆராய்க:
1. பாலின சமமின்மை குறியீட்டில் 1 என்பது ஆண் - பெண் சமத்துவத்தைக் குறிக்கும்.
2. 0 என்பது ஆண்-பெண் சமத்துவமின்மை உச்ச நிலையை குறிக்கும்.
- 1 சரி
- 1,2 சரி
- 2 சரி
- 1,2 தவறு
9. மண்டல் கமிஷன் சர்ச்சை முடிவுக்கு வர காரணமாக இருந்த பணியாளர்(ம) பயிற்சி துறையின் ஒப்பந்தமான எந்த நாளில் பாடப்பட்டது.
- 1993 செப்டம்பர் 13
- 1992 செப்டம்பர் 8
- 1993 செப்படம்பர் 8
- 1992 செப்டம்பர் 13
10. தவறான இணை எது? (முதலிடம் பெற்ற மாவட்டங்கள்)
- பாலின சமமின்மை குறியீடு - அரியலூர்
- உணவு பாதுகாப்பு குறியீடு - திருவாரூர்
- குழந்தை நலமேம்பாட்டு குறியீடு- கன்னியாகுமரி
- மனித மேம்பாட்டு குறியீடு - கன்னியாகுமரி