Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

TNPSC பொதுத் தமிழ் வினா விடை - 08

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

சிலப்பதிகாரம்
சிலம்பு, சமுதாயக் காப்பியம், தமிழின் முதல் காப்பியம், தமிழ் தேசியக் காப்பியம், பைந்தமிழ் காப்பியம், முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புதுமைக்காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் பாப்பியம், போராட்ட காப்பியம், புரட்சிக்காப்பியம், சிறப்பதிகாரம்
மணிமேகலை
மணிமேகலைத் துறவு, துறவுக் காப்பியம், முதல் சமயக்காப்பியம், சீர்திருத்தக்காப்பியம், குறிக்கோள் காப்பியம், புரட்சிக்காப்பியம், சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம், கதை களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், இயற்றமிழ் காப்பியம்
சீவக சிந்தாமணி
மணநூல், முக்திநூல், காம நூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள், இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி
குண்டலகேசி
குண்டலகேசி விருத்தம், அகல கவி
நாக குமார காவியம்
நாகபஞ்சமி கதை
உதயண குமார காவியம்
உதயணன் கதை
நீலகேசி
நீலகேசி தெருட்டு, நீலம் (யாப்பருங்கல விருத்தியுரை)
நாலடியார்
நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம், திருக்குறளின் விளக்கம்
நான்மணிக்கடிகை
துண்டு, கட்டுவடம்
களவழி நாற்பது
பரணி நூலின் தோற்றுவாய்
திருக்குறள்
திருவள்ளுவம், தமிழ் மறை, உலகப் பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, தெய்வ நூல், வாயுறை வாழ்த்து, உத்திர வேதம், திருவள்ளுவப்பயன், தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறஇலக்கியம், அறிவியல் இலக்கியம், குறிக்கோள் இலக்கியம், நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு, பொருளுரை (மணிமேகலை காப்பியம்)
பழமொழி நானூறு
பழமொழி, உலக வசனம்
முதுமொழிக்காஞ்சி
அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி
கைந்நிலை
ஐந்திணை அறுபது
திருமுருகாற்றுப்படை
முருகு, புலவராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை
பாணாறு, சமுதாயப்பாட்டு
கூத்தராற்றுப்படை
மலைபடுகடாம்
குறிஞ்சிப்பாட்டு
பெருங்குறுஞ்சி, களவியல் பாட்டு
முல்லைப்பாட்டு
நெஞ்சாற்றுப்படை, முல்லை
பட்டிணப்பாலை
வஞ்சி நெடும் பாட்டு, பலைப்பாட்டு
நெடுநல்வாடை
பத்துப்பாட்டின் இலக்கிய கருவூலம், மொழிவளப் பெட்டகம், சிற்பப்பாட்டு, தமிழ்ச் சுரங்கம்
மதுரைக் காஞ்சி
மாநகர்ப்பாட்டு, கூடற் தமிழ், காஞ்சிப்பாட்டு
கம்பராமாயணம்
இராமாவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
அகநானூறு
நெடுந்தொகை
பழமொழி
முதுமொழி, உலக வசனம்
பெரியபுராணம்
திருத்தொண்டர் புராணம்
இலக்கண விளக்கம்
குட்டித் தொல்காப்பியம்
பட்டிணப்பாலை
வஞ்சிநெடுதம்
கலித்தொகை
கற்றறிந்தோர் தொகை
புறநானூறு
புறம், புறப்பாட்டு, தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
திருமுருகாற்றுப்படை
புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
பாணாறு
மலைபடுகடாம் x
கூத்தராற்றுப்படை
முல்லைப்பாட்டு
நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப்பாட்டு
பெருங்குறிஞ்சி, காப்பியப் பாட்டு
முக்கூடற்பள்ளு
உழத்திப் பாட்டு
பெருங்கதை
கொங்குவேள் மாக்கதை
சிலப்பதிகாரம், மணிமேகலை
இரட்டைக் காப்பியங்கள்
மணிமேகலை
மணிமேகலை துறவு
மணிமேகலை, குண்டலகேசி
பௌத்த காப்பியங்கள்
திருமந்திரம்
தமிழர் வேதம்
சின்னூல்
நேமிநாதம்
நீலகேசி
நீலகேசி தெருட்டு
திருக்கைலாய ஞான உலா
குட்டித் திருவாசகம்
தாயுமாணவர் பாடல்கள்
தமிழ்மொழியின் உபநிடதங்கள்
முதுமொழிக் காஞ்சி
அறவுரைக் கோவை
நறுந்தொகை
வெற்றி வேற்கை
அழகின் சிரிப்பு
குழந்தை இலக்கியம்

No comments:

Post a Comment