Tuesday, June 1, 2021

Tnpsc Group 2 & 2A Unit 8 & 9 Question Answer - 01

தமிழக வளர்ச்சி நிர்வாகம் & தமிழக வரலாறு மற்றும் பண்பாடு

1. பல்லவ நிர்வாகம் பற்றிய கூற்றில் சரியானது?
  1. பல்லவ அரசர்கள் சூட்டிக் கொள்ளும் பட்டங்களில் மகாராஜாதிராஜா என்ற பட்டம் வட இந்திய மரபிலிருந்து பெறப்பட்டன.
  2. மாணிக்க பண்டார காப்பாளரை மேற்பார்வை செய்பவர் கோச-அதீயகூஷா
  3. தலைமை நீதிமன்றம் 'தருமாசனம்' என்றும் தலைமை நீதிபதி 'தர்மாதிகாரி' என்றும் அழைக்கப்பட்டனர்.
  4. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் ' அதிகர்ண தண்டம்'. கீழ் நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படம் அபராதங்கள் 'கர்ண தண்டம்' ஆகும்.
  • (i), (iii), (iv) சரி (ii) தவறு
  • (i), (iii), (ii) சரி (iv) தவறு
  • (i), (ii), (iv) சரி (iii) தவறு
  • அனைத்தும் சரி
2. பல்லவர்கள் வணிகத் தொடர்பு செய்யப்பட்ட நாடுகளுள் அல்லாதது?
  • சீனா
  • சுமத்ரா
  • மியான்மர்
  • ஜப்பான்
3. மேற்கு கடற்கரையில் வணிகத்தில் முன்னிலை வகித்தவர்கள் '
  • இந்திய வணிகர்கள்
  • நானாதேசி வணிகர்கள்
  • அரேபிய வணிகர்கள்
  • ஐநூற்றுவர் வணிகர்கள்
4. சாளுக்கிய நாட்டிலிருந்து பல்லவ நாட்டிற்கு அறிமுகமான வழிபாடு?
  • ஜேஷ்டாதேவி
  • கௌமாரம்
  • காணாபத்யம்
  • சப்தமாதர்
5. பொருத்துக:
  1. தண்டின்- சிவத்தளிவெண்பா
  2. 3-ம் சிம்மவர்மன் - கதச்சாரம்
  3. சர்வநந்தி - லோக விபாகம்
  4. சேரமான் பெருமாள் நாயனார்- பொன்வண்ணத்து அந்தாதி
  • 4 3 2 1
  • 1 2 3 4
  • 2 1 3 4
  • 2 1 4 3
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: 
  1. நகரங்களில் சிறந்தது காஞ்சி என கூறியவர் - திருநாவுக்கரசர் 
  2. கல்வியில் கரையிலாத காஞ்சி என கூறியவர் - காளிதாசர்
  • 1 சரி 2 தவறு
  • 1 தவறு 2 சரி
  • 1,2 சரி
  • 1,2 தவறு
7. கீழ்க்காண்பனவற்றுள் தவறானவற்றை கண்டறிக?
  1. பஞ்ச பாண்டவர் ரதத்தில் நேர்த்தியானதும் அளவில் பெரியது தர்ம ராஜரதம் ரதங்களில் சிறியது திரௌபதி ரதம்.
  2. பல்லவர் சிற்பக் கலையின் சிறப்புக்கு சிகரமாகக் கருதப்படுவது ராஜசிம்மேஸ்வரம்
  3. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியார் என்பவரின் மாணவன் முதலாம் மகேந்திர வர்மன்
  4. பல்லவர் காலத்து ஒவியங்களைச் கண்டறிந்து வெளிப்படுத்தியவர்-மு.வே.துப்ய்ஸ்(பிரான்ஸ்)
  • 2 மட்டும்
  • 3 மட்டும்
  • 1 மட்டும்
  • 4 மட்டும்
8. பொருத்துக
  1. இரண்டாம் ராஜேந்திரன் - கி.பி 1056 - கி.பி.1064
  2. முதலாம் ராஜராஜ சோழன் - கி.பி 985 - கி.பி.1014
  3. முதலாம் பராந்தகச் சோழன்-கி.பி 907 - கி.பி.955
  4. வீர இராஜேந்திரன் - கி.பி 1063 - கி.பி.1070
  • 1 2 3 4
  • 1 2 4 3
  • 2 1 3 4
  • 3 2 4 1
9. நிகரிலி சோழ மண்டலம் என அழைக்கப்படுவது?
  • கங்கப்பாடி
  • நூளாம்பாடி
  • கொங்குநாடு
  • கீழை சாளுக்கிய நாடு
10. மதுரையும் ஈழமும் கொண்ட தேவன் என அழைக்கப்படுபவர்?
  • வீரநாராயணன்
  • பண்டித வத்சலன்
  • சூரசிகர்மணி
  • மேற்கண்ட அனைத்தும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News