01. புதிய கருத்து, புதிய நிறுவனம், புதிய பொருள், புதிய முறை அல்லது புதிய பணி ஆகியவற்றின் பங்கு முதல் அல்லது பங்கு முதல் சார்ந்த முதலீடு கிடைக்கக்கூடிய அதிக முதலீட்டு வருவாயின் பெயர்.
அ) நிறுவன முதல்
ஆ) துணிகர முதல்
இ) தொடக்க மூலதன அளிப்பு
ஈ) இயல்பு மூலதனம்
02. சம உரிமை மேலாண்மை அரசு கட்டுப்பாடு சேவை நோக்கு தன்னார்வ நிறுவனம் போன்ற இயல்புகள் கொண்ட வணிக அமைப்பு வடிவின் பெயர்.
அ) கூட்டு வணிக நிறுவனம்
ஆ) தனிநபர் நிறுவனம்
இ) கூட்டுறவு சங்கம்
ஈ) நிறுமம்
03. நற்பெயர் என்பது
அ) கண்ணிற்கு புலனாகும் சொத்து
ஆ) கண்ணிற்கு புலனாகா சொத்து
இ) கற்பனைச் சொத்து
ஈ) இவற்றில் எதுவுமில்லை
04. எதிர்ப்பார்க்கப்படும் லாபம் எதையும் பதியக்கூடாது. அதே சமயம் எதிர்பார்க்கப்படும் நட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது
அ) வெளிப்படுத்துதல் மரபு
ஆ) நிலைத்திருத்தல் மரபு
இ) பாதுகாப்பாக இருத்தல் மரபு
ஈ) முக்கியத் தன்மை மரபு
05. ஒரு வியாபாரம் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நடைபெறும் என்ற ஊகத்தின் அடிப்படையில் இக்கருத்து நிலவுகிறது.
அ) வியாபார உட்பொருள் கருத்து
ஆ) தொடர்ந்து நடைபெறும் நிறுவனக் கருத்து
இ) கணக்கியல் காலக் கருத்து
ஈ) பணமாக்குதல் கருத்து
06. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகள் மூடப்பட்டு அவற்றின் வியாபாரம் ஒரு பழைய அல்லது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கம்பெனியால் எடுத்துக் கொள்ளப்படுமனால்
அ) ஈர்ப்பு
ஆ) ஒருங்கிணைப்பு
இ) புறமாறு அமைப்பு
ஈ) அகமறு அமைப்பு
07. AS-14 விதி பிரகாரம் கொள்முதல் கைமாறு யாருக்கு செலுத்த வேண்டும்?
அ) சாதாரண பங்குதாரர்களுக்கு மட்டும்
ஆ) கடனீட்டு பத்திரங்களுக்கு மட்டும்
இ) பங்குதாரர்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரதாரர்கள்
ஈ) சாதாரண மற்றும் முன்னுரிமை பங்குதாரர்கள்
08. அகமறு அமைப்பு செய்யும் நேரத்தில் சொத்தின் மறுமதிப்பீட்டில் ஏதேனும் நட்டம் ஏற்பட்டால் எந்த கணக்கில் இருந்து சரிகட்ட வேண்டும்
அ) பங்கு முதல் க/கு
ஆ) மூலதன காப்பு க/கு
இ) மூலதன மறு அமைப்பு க/கு
ஈ) மூலதனக் குறைப்பு க/கு
09. கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது சரி, தவறு?
அ) உலகமயமாக்கல் பன்னாட்டு நிதி பரிவர்த்தனையை வளரச் செய்துள்ளது.
ஆ) உலகமயமாக்கல் அதிகமான வளர்ச்சியை பன்னாட்டு நிறுமங்களுக்கு வழங்கியுள்ளது.
இ) உலகமகமாக்கல் விளைவாக, தொழில் நுட்பமும் கருத்துகளுகம் உலகளாவிய போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு மூலம் எல்லோரையும் சென்றடைகிறது.
ஈ) உலகமயமாக்கல் உள்ளுர் விற்பனை எழுநிலை பெற்றுள்ளது.
10. TRIPS ன் கீழ் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை எத்தனை ஆண்டுகளுக்கு காக்கப்படும்?
அ) 20 ஆண்டுகள், 50 ஆண்டுகள்
ஆ) 50 ஆண்டுகள், 20 ஆண்டுகள்
இ) 20 ஆண்டுகள் 40 ஆண்டுகள்
ஈ) 40 ஆண்டுகள் 20 ஆண்டுகள்