IMPORTANT LINKS

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, May 1, 2025

முருங்கை கீரை பொடி செய்வது எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

முருங்கைக் கீரை பொடி செய்வதற்கு முதலில் முருங்கைக் கீரையை பறித்து நன்றாக தண்ணீரில் அலசி உருவி எடுத்துக்கொள்ள வேண்டும். 

கீரையை உருவிய பிறகும் இதனை அலசி ஒரு துணியில் விரித்து காய வைத்துக் கொள்ளவும். 

ஒரு கப் அளவிற்கு முருங்கைக்கீரை வரும்படி எடுத்துக்கொள்ளவும். 

இப்பொழுது கடாயில் என்னை எதுவும் சேர்க்காமல் நாம் அலசி காயவைத்த முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். 

குறைவான தீயில் வைத்து கீரை மொறுமொறுவென்று வரும்படி நன்கு வறுக்க வேண்டும். 

குறைந்தது பத்து நிமிடங்கள் ஆவது வறுத்தால்தான் கீரை நல்ல மொறு மொறுப்பாக மாறும். 

கீரை நன்கு வறு பட்டதும் இதனை வேறொரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்து விடலாம்.......

பிறகு அதே கடாயில் இரண்டு துளி எண்ணெய் சேர்த்து கால் ஸ்பூன் அளவு கட்டிப் பெருங்காயத்தை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது பெருங்காயத்துடன் எட்டு காய்ந்த மிளகாய்களை சேர்க்கவும். 

காரம் கூடுதலாக தேவைப்படுபவர்கள் மிளகாயை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம் குழந்தைகளுக்கு அதிக காரம் வேண்டாம் என நினைத்தால் மிளகாய் தூள் பதிலாக மிளகும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதனுடன் ஒரு கப் அளவிற்கு கடலைப்பருப்பு ஒரு கப் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் நெல்லிக்காய் அளவு புலியையும் சேர்த்து வறுக்கவும். இதனை தனியாக வைத்து ஆறவிடவும் இப்பொழுது அதே கடாயில் சில துளிகள் என்னை சேர்த்து எழு பல் பூண்டு சேர்த்து அதையும் எண்ணெயில் நன்கு வறுத்து ஆற விட வேண்டும். 

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கீரையைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் இதனை பொடியாக ஓரளவு அரைத்த பிறகு வறுத்து வைத்திருக்கும் கீரையையும் சேர்த்து நல்ல பொடியாக அரைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான் சுவையான சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரை பொடி தயாராகி விட்டது.......