எலுமிச்சம் பழச்சாறு இரண்டு சொட்டுகள் காதில் விட காது குடைச்சல் குணமாகும்.
கோரைக்கிழங்கு கசாயம் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்க்க கண்கள் குளிர்ச்சி அடையும்
வாத நோய் மூலநோய் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.
அண்ணாச்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வர கண்களுக்கு வரும் நோய்களை தடுக்கலாம்.
தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
வெற்றிலை காம்பு, வசம்பு, திப்பிலியை அரைத்து வெந்நீரில் கலந்து குடித்தால் சளி குறையும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறியாநங்கை 3 இலைகளை சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.
குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.
பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.
கோவைப்பழம் சாப்பிட தீராத பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம். இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
மிளகு பொடியை தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடல் பலவீனமானவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட சக்தி பெறுவார்கள்
பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து குடித்து வர இருமல் நிற்கும்
காலில் ஏற்படும் பித்த வெடிப்பு குணமாக தேனையும் சுண்ணாம்பையும் ஒன்றாக குலைத்து பித்த வெடிப்பில் தடவ வெடிப்பு குணமாகும்.
குங்குமப்பூவை தேன் கலந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
தினசரி ஐந்து ஆவாரம் பூவென்று சாப்பிட்டு வர சிறுநீர் புறவழி புண்கள் ஆறும்.
சங்கு இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
துளசியிலேயே தொடர்ந்து நுகர்ந்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடிக்க பல் வலி பல் சொத்தை குணமாகும்.
Tags:
உடல் நலம்