ஒரே மாதத்தில் தொப்பையை கரைத்து எடையை குறைக்க...


அதிகரிக்கும் உடல் எடை இந்த காலத்தில் பலரை ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.

குறிப்பாக தொப்பை கொழுப்பு அதிகமாகி விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், இந்த முயற்சிகளால் பக்க விளைவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். நமது சமையலில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் வைத்து மிக வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். இதை எப்படி செய்வது என இங்கே காணலாம்.

ஏலக்காய்

ஏலக்காய், ஒரு பிரபலமான சமையலறை மசாலாவாக உள்ளது. இதில் எடை இழப்பு மற்றும் கொழுப்பை எரிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. இவை தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்க உதவுகின்றன. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது. ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்தி, தேவையற்ற பசி, வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கின்றது.

ஏலக்காய் கொண்டு உடல் எடையை குறைக்க அதை எப்படி பயன்படுத்துவது என இங்கே காணலாம்.

சமையலில் சேர்க்கலாம்

நாம் அன்றாடம் செய்யும் சமையலில் பல உணவுகளில் ஏலக்காயை சேர்க்கலாம். ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. தொப்பை கொழுப்பை குறைப்பதோடு கலோரி அளவையும் இது வேகமாக குறைக்க உதவுகின்றது.

ஏலக்காய் டீ

ஏலக்காய் தேநீர் நறுமணமிக்க ஒரு பானமாகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வீக்கத்தை குறைக்க உதவுகிறது. எடை இழப்பில் ஏலக்காய் டீ பெரிய அளவில் உதவும். இது உங்கள் எடை இழப்பு பயணத்தின் முக்கிய பகுதியாக இருக்கும். இதைச் செய்ய, சில ஏலக்காய்களை தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

ஏலக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர்

ஏலக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் தொப்பையை குறைக்க ஒரு சிறந்த கலவையாக பார்க்கப்படுகின்றது. இந்த கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஏலக்காய் மற்றும் தேன்

தேனுடன் ஏலக்காய் சேர்த்து உட்கொள்வது கொழுப்பு மற்றும் கலோரி எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்த கலவை பசியை குறைப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஏலக்காய் டீயுடன் இஞ்சி

இஞ்சி மற்றும் ஏலக்காயின் கலவை தொப்பையை குறைக்க சிறந்த வழியாக கருதப்படுகின்றது. இதைச் செய்ய ஏலக்காய் தேநீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி உட்கொள்ளலாம்.
Previous Post Next Post