Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Sunday, September 8, 2024

கிட்னி மற்றும் லிவர் பிரச்சினை வராமலிருக்க இந்த காய் உதவும்


பொதுவாகவே பீட்ரூட்டை பலரும் வாங்க மறுப்பார்கள் .மேலும் இதை வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்பது உண்டு .ஆனால் அதில் உள்ள உடல் ஆரோக்கியம் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம் 

1.இதில் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளதால் நமக்கு பொட்டாசியம் குறைபாட்டால் உண்டாகும் உடல் சோர்வு ,பலவீனம் மற்றும் இதய கோளாறுகள் போன்றவற்றை குணப்படுத்தும் .

2.மேலும் இது ஆரம்ப நிலை கேன்சரை குணப்படுத்தும் என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது .

3.அதனால் இதை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளுங்கள் .

4.அல்சர் நோயால் அவதி படுவோர் பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகி ஆரோக்கியம் பெருகும் .

5.கிட்னி மற்றும் லிவர் பிரச்சினை வராமலிருக்க பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

6. சிலர் தீப்புண் வந்து அவதிப்படுவர் ,அப்போது தீயினால் சுட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.