எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான். செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.
தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.
உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்.
தசை நரம்புகள்
இறுக்கம் வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.
இரும்பு சத்து
அனைவருக்குமே உடலில் இரும்பு சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.
இளமை தோற்றம்
தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.
கீல்வாதம்
கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது. செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
நீரிழிவு
உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் வந்த பின்பு அவதிப்படுவதை விட அந்நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. மாங்கனீஸ் சத்து உடலுக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. இந்த சத்து நீரிழிவு ஏற்படாமல் உடலை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
Tags:
உடல் நலம்