காலையில் எழுந்தவுடன் இரு கைகளை சேர்த்து தேய்த்துக்கொள்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
இது பலருக்கு பொதுவாக உள்ள ஒரு பழக்கம் என்றாலும், இதில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. இந்த பழக்கம் ஏன் உருவானது? இதைச் செய்வதால் ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுமா? இதைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கைகளை தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அதிகாலையில் எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து, தேய்க்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் கண்களை சூடாக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்படிச் செய்வதால் உறக்கம் முழுமையாக கலையும் என்றும் இதன் மூலம் உடலில் உடனடி ஆற்றல் பெருகும் என்றும் கூறப்படுகின்றது. இது தவிர கைகளை தேய்த்துக்கொள்வதால் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
கைகளை தேய்த்துக்கொள்வதால் கிடைக்கும் 5 அளப்பரிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்
மன அழுத்தம்
காலையில் இரண்டு உள்ளங்கைகளையும் தேய்ப்பதால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் (Mental Tension) ஆகியவை குறைகின்றன. உள்ளங்கைகளை தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது மூளையை அமைதிப்படுத்தி அதற்கு ஓய்வளிக்கின்றது. இந்த சிறிய செயல்பாட்டின் மூலம் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
கவனம்
காலையில் எழுந்ததும் இரண்டு உள்ளங்கைகளையும் 2-3 நிமிடம் தேய்த்துக்கொண்டால், அந்த நேரத்தில் ஏற்படும் உணர்வுகளால் மனம் சுறுசுறுப்பாக இருக்கும். மூளை உடனடியாக செயல் முறைக்கு செல்லும் செய்தியைப் பெறுகிறது. இதன் காரணமாக நமது கவனம் (Focus) அதிகரிக்கிறது. மூளையின் கவனம் செலுத்தும் சக்தி அதிகமாவதால், வேலை மற்றும் படிப்பில் கவனம் செலுத்துவது எளிதாகிறது.
சீரான மனநிலை
உள்ளங்கைகளை தேய்ப்பது உங்கள் மனநிலையை உற்சாகமாக வைக்கின்றது. 2 நிமிடம் கைகளைத் தேய்க்கும்போது, மூளையில் சந்தோஷ ஹார்மோன்கள் வெளியாகும். மகிழ்ச்சி ஹார்மோன்களின் (Happy Hormones) விளைவால், மனநிலை நன்றாக இருக்கும். இதனால் எரிச்சல், கோவம் போன்ற உணர்வுகள் குறையத் தொடங்குகிறது.
சிறந்த தூக்கம்
தூங்குவதில் சிக்கல் இருப்பவர்கள் தினமும் காலையில் இந்த 2 நிமிட பயிற்சியை செய்யத் தொடங்கலாம். உள்ளங்கைகளைத் தேய்ப்பதன் மூலம் உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகும். இரவு தூங்கும் முன் கைகளை தேய்த்தால் நல்ல தூக்கம் (Sleep) வரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குளிர்காலம்
இன்னும் சில நாட்களில் குளிர்காலம் (Winters) தொடங்க உள்ளது. இந்த பருவத்தில், கைகளை தேய்த்துக்கொள்வதால், உடலில் உஷ்ணம் உண்டாகிறது. குளிர்காலத்தில் கைகளை தேய்ப்பதால் விரல்களின் விறைப்பு நீங்கும். நடுக்கமும் போய்விடும். இது குளிர்காலத்தில் உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
இவை மட்டுமின்றி, உள்ளங்கைகளை தேய்ப்பதால் மேம்பட்ட ஆற்றல், கண்கள் பாதுகாப்பு, தைரியம், சிறந்த இரத்த ஓட்டம், சீரான மனநிலை ஆகிய நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன.
Tags:
உடல் நலம்