Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, September 12, 2024

கை கால் ஒரே குடைச்சலா இருக்கா?? உடனே எண்ணையுடன் இந்த 3 பொருட்களை கலந்து தடவுங்கள்!!


பெண்கள் பலர் சந்திக்கும் பிரச்சனை கை கால் குடைச்சல்.நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் கை கால் குடைச்சல் ஏற்படும்.உடலில் வைட்டமின் பி12 குறைபாடு,கால்சியம் குறைபாடு,ஹார்மோன் குறைவாக சுரத்தல் போன்ற காரணங்களால் கை கால்களில் குடைச்சல் ஏற்படுகிறது.

நீண்ட நேரம் நின்றபடி வேலை பார்த்தல்,ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை பார்த்தல்,அதிக மன அழுத்தம்,வேலைச்சுமை,இரத்த சோகை,தைராய்டு உள்ளிட்ட பல காரணங்களால் கை,கால்களில் குடைச்சல் ஏற்படுகிறது.

இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:

1)சுக்கு - 10 கிராம்
2)திப்பிலி - 10 கிராம்
3)மிளகு - 10 கிராம்
4)ஓமம் - 10 கிராம்
5)விளங்கம் - 10 கிராம்
6)நெய் - ஒரு தேக்கரண்டி
7)தேன் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 10 கிராம் சுக்கு,10 கிராம் திப்பிலி,10 கிராம் கருப்பு மிளகு,10 கிராம் ஓமம் மற்றும் 10 கிராம் விளங்கம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி பண்ணிக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த பொடியை கொட்டி ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு தேன் கலந்து லேகியம் பதத்திற்கு கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் குடைச்சல் சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1)நொச்சி இலை
2)தாழை இலை
3)முடக்கத்தான் இலை

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிறிதளவு நொச்சி இலை,தாழை இலை மற்றும் முடக்கத்தான் இலை போட்டு குறைவான தீயில் காய்ச்சவும்.

200 மில்லி எண்ணெய் சுண்டி 150 மில்லியாக வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை கை கால்களில் அப்ளை செய்து வந்தால் குடைச்சல் சரியாகும்.