Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Tuesday, August 20, 2024

தமிழகத்தில் 5 போக்குவரத்து விதிகள் மாற்றம்!



தமிழகத்தில் தற்போது போக்குவரத்து விதிகளில் ஐந்து முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும் சாலையில் பாதுகாப்பாக பயணிகள் பயணம் செய்வதற்காகவும் போக்குவரத்து விதிமுறைகளில் இருக்கும் சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இப்படியாக என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

தமிழகத்தில் இனி லைசென்ஸ் எடுக்கும் வழிமுறை முழுவதும் ஆன்லைன் மூலமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி இனி ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் லைசென்ஸ்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்கள் இது மட்டுமல்லாமல் இனி லைசென்ஸ் எடுக்க ஆர்டிஓ ஆபீஸுக்கு நேரடியாக செல்ல வேண்டியது இல்லை எனவும் ஆன்லைன் மூலமாக அனைத்து விதமான பணிகளையும் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் பதிவேந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் தமிழக போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளார்கள் இது மட்டுமல்ல 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் பதிவின் 12 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் எனவும் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளார்கள் இதனால் உங்கள் வீட்டில் 18 வயதுக்கு குறைவான இளைஞர்கள் இருந்தால் அவர்களை எக்காரணத்தை கொண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.

தற்போது தமிழகத்தில் புதிதாக கார் பைக் வாங்குபவர்கள் புதிதாக நம்பர் பதிவு செய்து வரும் வரை பார் ரெஜிஸ்ட்ரேஷன் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வந்த காரை பொதுசாலைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் இனி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இனி ஷோரூமில் இருந்தே கார் வெளியே வரும் போது தற்காலிக பதிவனுடன் கார் வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படியான தற்காலிக பதிவின் மஞ்சள் நிற போர்டில் சிவப்பு நிற எழுத்துக்கள் கொண்டு பதிவின் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சிலர் மஞ்சள் நிற பேப்பரில் சிவப்பு நிற எழுத்துக்களை எழுதி அதை ஸ்டிக்கராக ஒட்டி வருகிறார்கள் இதுவும் சட்ட விதிமுறை மீறல் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பதிவு எண்ணை தகடுகளில் பொறுத்து அதை ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இது காரில் மாற்றங்களை செய்தால் மற்றும் வேறு மாநிலங்களுக்கு சென்று பதிவு செய்தல் போன்ற விஷயங்களுக்காக இந்த தற்காலிக பதிவின் உதவுவதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என வாகன விற்பனை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதி விதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி மத்திய மோட்டார் வாகன சட்டப்படி பதிவு செய்யப்பட்ட மருத்துவரிடம் மருத்துவ சான்று பெற்ற பெற்ற பின்னரே புதிய ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கவும் அல்லது பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும் முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதற்காக மருத்துவர்கள் தங்களை ஒரு முறை சாரதி தளத்தில் பதிவு செய்து கொண்டு அதன் பின்னர் அவர்கள் சான்று வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இந்த விதிமுறை அமலில் இருந்தாலும் பலர் பதிவு செய்யப்படாது அல்லது போலி மருத்துவரிடம் சான்று பெற்று அதை வைத்து லைசன்ஸ் பெற முயற்சி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த நடைமுறையை தற்போது அரசு தீவிர படுத்தியுள்ளது இதனால் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களிடம் மட்டுமே சான்று பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வருவது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான் இதனால் சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கை குறையும். மேலும் போக்குவரத்து தொடர்பான லைசென்ஸ் குறித்த விவகாரங்களில் விதிமுறைகள் மீறப்படுவது குறையும். இதனால் அதிகமாக மக்கள் பலனடைவார்கள் என்பது நிச்சயம்.