Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 20, 2024

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

  1. அக்கம் - தானியம்·
  2. அங்கண் - அழகிய இடம்
  3. ஆமா - காட்டுப்பசு
  4. ஆற்றுணா - கட்டுச்சோறு
  5. இருந்தி - பெருஞ்செல்வம்
  6. இரும்பை - பாம்பு
  7. ஈட்டம் - கூட்டம்
  8. ஈங்கதிர் - சந்திரன்
  9. உரன் - திண்ணிய அறிவு
  10. உலண்டு - கோற்புழு
  11. உகுநீர் - ஒழுகும் நீர்
  12. ஊழை - பித்தம்
  13. எழினி - இருதிரை
  14. எறும்பி - யானை
  15. எருத்தம் - பிடரி, கழுத்து
  16. கவர்தல் - நுகர்தல்
  17. ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
  18. சிறுமை - துன்பம்
  19. மறுமை - மறுபிறவி
  20. நன்றி - நன்மை
  21. அல்லவை - பாவம்
  22. துவ்வாமை - வறுமை
  23. அமர்ந்து - விரும்பி
  24. அகன் - அகம், உள்ளம்
  25. படிறு - வஞ்சம்
  26. செம்பொருள் - மெய்ப்பொருள்
  27. பீற்றல் குடை - பிய்ந்த குடை
  28. கடையர் - தாழ்ந்தவர்
  29. விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  30. நுனி - மிகுதி
  31. முழவு - மத்தளம்
  32. வனப்பு - அழகு
  33. தூறு - புதர்
  34. மெய்ப்பொருள் - நிலையான பொருள்
  35. வண்மை - கொடைத்தன்மை
  36. புரை - குற்றம்
  37. குழவி - குழந்தை
  38. ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
  39. துன்னலர் - பகைவர்
  40. கலைமடந்தை - கலைமகள்
  41. நீரவர் - அறிவுடையார்
  42. அகம் - உள்ளம்
  43. அல்லல் - துன்பம்
  44. புனைதல் – புகழ்தல்

No comments:

Post a Comment