தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 22

காலில் காயத்திற்குக் கட்டுப் போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். “எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துனர் கேட்டார். அதே நேரம் அருகிலிருந்த ஒருவர் “உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார். அதற்கு அவன் “செங்கல்பட்டு” என்று கூறினான். அவன் கூறியது இருவரின் வினாவிற்கும் பொருத்தமான விடையாக அமைந்தது. அவன் செல்ல வேண்டிய ஊர் செங்கல்பட்டு என்று நடத்துனர் புரிந்து கொண்டார். அவன் காலில் செங்கல் பட்டு காயம் ஏற்பட்டது என மற்றவர் புரிந்து கொண்டனர். இவ்வாறு ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது ‘இரட்டுற மொழிதல்’ என்னும் அணியாகும். இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.

 

79. இப்பத்தியில் பயின்று வரும் அணி யாது?

 

(A) தற்குறிப்பேற்ற அணி

(B) சிலேடை அணி

(C) உவமையணி

(D) எடுத்துக்காட்டு உவமையணி

 

80. இப்பத்தியில் இடம் பெறும் ஊரின் பெயர்?

 

(A) காஞ்சிபுரம்

(B) மாம்பட்டு

(C) செங்கோட்டை

(D) செங்கல்பட்டு

 

81. இளைஞன் பயணம் செய்த வாகனம் எது?

 

(A) சிற்றுந்து

(B) மகிழுந்து

(C) பேருந்து

(D) தொடர்வண்டி

 

82. இப்பத்தியில் இடம் பெறும் வினாத் தொடரைத் தேர்ந்தெடு

 

(A) உன் பயணச்சீட்டைக் கொடு

(B) உன் பயணச்சீட்டு

(C) உன் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்

(D) எந்த ஊருக்கு பயணச்சீட்டு வேண்டும்?

 

83. இளைஞனுக்கு அடிப்பட்ட இடம் குறிப்பிடு

 

(A) தலை

(B) கால்

(C) கை

(D) உடல்

 

84. கீழ்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது?

 

(A) ஒரு ஊர்

(B) ஓர் ஊர்

(C) ஓர் பழைய ஊர்

(D) ஒரு இனிய ஊர்

 

85. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

 

(A) மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(B) மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(C) மாலை நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஓர் அமைச்சர் தலைமை தாங்குகிறார்

(D) மாலை நடக்கும் ஓர் பொதுக்கூட்டத்திற்கு ஒரு அமைச்சர் தலைமை தாங்குகிறார்

 

86. பிழையற்றத் தொடரைக் கண்டறிக - ஒரு – ஓர்

 

(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(C) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(D) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

 

87. சரியாக பொருந்தும் இணையைக் கண்டறிக

 

(A) நந்தவனம் – இசை

(B) பார் –  பூஞ்சோலை

(C) பணி – உலகம்

(D) இழைத்து –  செய்து

 

88. சொல் – பொருள் – பொருத்துக

 

(a) எத்தனிக்கும்       1. சமம்

(b) வெற்பு              2. வயல்

(c) கழனி               3.மலை

(d) நிகர்                4. முயலும்

 

(A)       4          3          2          1

(B)       1          2          4          3

(C)       3          1          2          4

(D)       4          1          3          2

 

89. சொல் – பொருள் பொருத்துக

 

(a) பயிலுதல்          1. மேகம்

(b) நாணம்             2. படித்தல்

(c) முகில்              3. எமன்

(d) காலன்             4. வெட்கம்

 

(A)       2          4          1          3

(B)       3          2          1          4

(C)       1          2          3          4

(D)       2          3          4          1

 

90. ஒருமை – பன்மை பிழையற்றச் சொல்லைத் தேர்க – ( கண்ணகியின் சிலம்பு ________ )

 

(A) இதுவல்ல

(B) இதுவன்று

(C) இவையன்று

(D) இவையல்ல

 

91. ஒருமை பன்மை பிழை ( கன்று ________ தலையை ஆட்டியது.)

(A) தான்

(B) தாம்

(C) தமது

(D) தனது

 

92. ஒருமை – பன்மை பிழையற்றத் தொடர் எது?

 

(A) என் தங்கை பரிசு பெற்றான்

(B) என் தங்கை பரிசு பெற்றன

(C) என் தங்கை பரிசு பெற்றது

(D) என் தங்கை பரிசு பெற்றாள்

 

93. சரியான தொடரைத் தேர்ந்தெடு ( நான் நன்றாக தேர்வு எழுதினேன்)

 

(A) உணர்ச்சித் தொடர்

(B) எதிர்மறை வினைத்தொடர்

(C) உடன்பாட்டு வினைத்தொடர்

(D) செயப்பாட்டு வினைத்தொடர்

 

94. சரியான தொடரைத் தேர்ந்தெடு (‘அறைக்குப் புத்தகங்கள் வருவித்தார்’)

 

(A) தன் வினைத்தொடர்

(B) உடன்பாட்டு வினைத்தொடர்

(C) செய்தித்தொடர்

(D) பிற வினைத்தொடர்

 

95. கூட்டுப் பெயரைக் குறிப்பிடு - மா

 

(A) மாங்கொல்லை

(B) மாமரங்கள்

(C) மாந்தோப்பு

(D) மாந்தோட்டம்

 

96. கூட்டப் பெயரைக் குறிப்பிடு - கல்

 

(A) கல் குட்டை

(B) கற் குவியல்

(C) கல் குவாரி

(D) கல் கோபுரம்

 

97. கீழ்க்காணும் சொல்லின் கூட்டுப்பெயர் யாது? - ஆடு

 

(A) ஆட்டுக்கூட்டம்

(B) ஆட்டு மந்தை

(C) ஆட்டுப்படை

(D) ஆட்டு நிரை

 

98. நீண்டதொரு காலப்பகுதி எனும் பொருளைத் தரும் சொல்

 

(A) ஆழி

(B) ஊழி

(C) வாழி

(D) பாழி

 

99. ‘அகம்’- இச்சொல் தரும் இரு பொருள்களைக் கண்டறிக.

 

(A) வீடு, அன்பு

(B) அறிவு, நட்பு

(C) வீடு, மனம்

(D) அறிவு, பண்பு

 

100. சரியான இணையைத் தெரிவு செய்க

 

(A) உத்தரவு –  பணி

(B) கஜானா – வருவாய்

(C) பாக்கி –  இழப்பு

(D) அலங்காரம் – ஒப்பனை

Post a Comment

Previous Post Next Post