தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 21

61. ஒரு பொருள் தரும் பல சொற்கள் ( பிள்ளை, குட்டி, மடலி, வடலி, கன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும் ?)

 

(A) இளம் விலங்கினம்

(B) தென்னை ஓலை

(C) இலைகள்

(D) இளம் பயிர் வகை

 

62. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் - விலை – விளை

 

(A) விருப்பம் உண்டாக்குதல்

(B) பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்

(C) இன்பம் – துன்பம்

(D) மதிப்பு – விருப்பம்

 

63. பொருள் வேறுபாடறிந்து சரியானவற்றைத் தேர்க ( வாசலில் போடுவது _________, பந்தின் வடிவம் __________. )

 

(A) கோலம், கோளம்

(B) கோளம், கோடு

(C) பூ, வட்டம்

(D) கோல், கோள்

 

64. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் கூறு (கூரை, கூறை)

 

(A) புடவை, வீட்டின் கூரை

(B) வீட்டின் தரை, புடவை

(C) வீட்டின் தரை, புடவைக்கரை

(D) வீட்டின் கூரை, புடவை

 

65. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக - Transplantation

 

(A) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

(B) சிறுநீரகச் செயலிழப்பு

(C) இதயநோய்

(D) மூட்டுவலி

 

66. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு - CONSONANT

 

(A) ஒப்பெழுத்து

(B) மெய்யெழுத்து

(C) கலந்துரையாடல்

(D) தீபகற்பம்

 

67. பொருத்துக

 

(a) பால் பண்ணை                1. Loom

(b) தோல் பதனிடுதல்           2. Dairy Farm

(c) சாயம் ஏற்றுதல்               3. Tanning

(d) தறி                        4. Dyeing

 

(A)         3          4          2          1

(B)         2          3          4          1

(C)        1          2          3          4

(D)        2          4          1          3

 

68. மரபுப்பிழை நீக்குக - பால் குடித்தான்

 

(A) பருகினான்

(B) சாப்பிட்டான்

(C) உண்டான்

(D) சுவைத்தான்

 

69. சந்திப் பிழையை நீக்குக ( கண்காணிப்பு கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையை திருப்புகிறது.)

 

(A) கண்க்காணிப்புக் கருவி அசைவு நிகழும்ப் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

(B) கண்க்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

(C) கண்க்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையை திருப்புகிறது.

(D) கண்க்காணிப்பு கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது

 

70. கோழி கூவும் – மரபுப் பிழையை நீக்குக

 

(A) கோழி குறுகும்

(B) கோழி கொக்கரிக்கும்

(C) கோழி அகவும்

(D) கோழி கரையும்

 

71. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக- மென்றொடர்க் குற்றியலுகரம்

 

(A) பண்பு

(B) மஞ்சு

(C) கண்டு

(D) எஃகு

 

72. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – இவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

 

(A) பாக்கு

(B) பஞ்சு

(C) பாட்டு

(D) பத்து

 

73. ‘நல்கினாள்’ என்பதன் எதிர்ச்சொல்

 

(A) கொடுத்தாள்

(B) எடுத்தாள்

(C) தந்தாள்

(D) தருகிறாள்

 

74. எதிர்ச்சொல் தருக - சோம்பல்

 

(A) அழிவு

(B) துன்பம்

(C) சுறுசுறுப்பு

(D) சோகம்

 

75. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - இரவலர்

 

(A) புரவலர்

(B) அரிது

(C) ஏற்றல்

(D) உறவினர்

 

76. பிரித்தெழுதுக - தம்முயிர்

 

(A) தம் + உயிர்

(B) தமது+உயிர்

(C) தம்மு + உயிர்

(D) தன் + உயிர்

 

77. சேர்த்து எழுதுக - பருத்தி + எல்லாம்

 

(A) பருத்தி எல்லாம்

(B) பருத்தியெல்லாம்

(C) பருத்தெல்லாம்

(D) பருத்திதெல்லாம்

 

78. வட்டு + ஆடினான் என்பதைச் சேர்த்தெழுதுக.

 

(A) வட்டு ஆடினான்

(B) வட்டினான்

(C) வட்டாடினான்

(D) வட்டுடாடினான்

Post a Comment

Previous Post Next Post