தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு வினா விடை - 18

1. சரியான நிறுத்தற்குறி இட்ட சொற்றொடரினை தேர்ந்தெடு

 

(A) “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணை வழுவமைதி ஆகும்.

(B) ‘என் அம்மை’ வந்தாள் – என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது ‘திணை வழுவமைதி’ ஆகும்.

(C) என் அம்மை வந்தாள் – என்று மாட்டைப் பார்த்துக்கூறுவது திணைவழுவமைதி ஆகும்.

(D) என் அம்மை வந்தாள் – என்று மாட்டைப்பார்த்துக் கூறுவது திணை வழுவமைதி ஆகும்

 

2. நிறுத்தற் குறியிடுக “பூனையின் காலில் அடிபட்டு விட்டதே”

 

(A) ஆ.பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே

(B) ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே!

(C) ஆ பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே.

(D) ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே

 

3. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: - “நான் திடலில் ஓடினேன்”

 

(A) தன்வினை

(B) செய்வினை

(C) பிறவினை

(D) செயப்பாட்டு வினை

 

4. சரியான ஊர்ப் பெயரின் மரூஉ எது ?

 

(A) புதுச்சேரி – புதுகை

(B) புதுக்கோட்டை – புதுவை

(C) உதகமண்டலம் – உதகை

(D) கும்பகோணம் – கும்பை

 

5. தில்லை என அழைக்கப்படும் ஊர்

 

(A) திருநெல்வேலி

(B) சிதம்பரம்

(C) சீர்காழி

(D) கன்னியாகுமரி

 

6. ஊர்ப்பெயரையும் அதன் மரூஉவையும் பொருத்துக

 

(a) தஞ்சாவூர்          1. குடந்தை

(b) திருநெல்வேலி    2. தஞ்சை

(c) கோயமுத்தூர்      3.நெல்லை

(d) கும்பகோணம்     4. கோவை

 

(A)       2          3          4          1        

(B)       1          2          4          3

(C)       3          1          4          2

(D)       3          4          2          1

 

7. சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க - விவாஹம்

 

(A) விழா

(B) திருமணம்

(C) பண்டிகை

(D) காதுகுத்து

 

8. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக - சர்க்கார்

 

(A) அரசாங்கம்

(B) ஜனநாயகம்

(C) அரவை

(D) ஆஸ்பத்திரி

 

9. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக - ‘லைட்ஹவுஸ்’

 

(A) கலங்கரை விளக்கம்

(B) படகு வீடு

(C) மரவீடு

(D) கப்பல் விளக்கு

 

10. நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு ‘கால் வலிக்கும்’ என்று விடை கூறுவது.

 

(A) மறை விடை

(B) நேர் விடை

(C) உற்றது உரைத்தல் விடை

(D) உறுவது கூறல் விடை

 

11. சரியான வினை மரபை எடுத்தெழுதுக

 

(A) தண்ணீர் பருகினான்

(B) தண்ணீர் அருந்தினான்

(C) தண்ணீர் பறுகினான்

(D) தண்ணீர் குடித்தான்

 

12. “இது செய்வாயா?” என்று வினவிய போது, “நீயே செய்” என்று கூறுவது

 

(A) ஏவல் விடை

(B) சுட்டு விடை

(C) மறை விடை

(D) நேர் விடை

 

13. அலுவல் சார்ந்த சொற்கள் (கலைச் சொல்) - Download.

 

(A) காணொலிக் கூட்டம்

(B) கீழிறக்கம்

(C) பதிவிறக்கம்

(D) மின்னனுக் கருவிகள்

 

14. அலுவல் சார்ந்த கலைச்சொல் தேர்ந்தெழுதுதல் - Personality

 

(A) நடவடிக்கை எடுத்தல்

(B) மனிதம்

(C) ஆளுமை

(D) கழகம்

 

15. Thesis என்பதற்கான சரியான கலைச்சொல்லைக் கண்டறிக

 

(A) குறியீட்டியல்

(B) ஆய்வேடு

(C) அறிவாளர்

(D) சின்னம்

16. கலைச் சொல்லுக்கானப் பொருளைத் தேர்ந்தெடு - ‘Social Reformer’

 

(A) சமூக சீர்த்திருத்தவாதி

(B) சமூகப் போராளி

(C) சமூக உழைப்பாளி

(D) சமுதாய ஒருங்கிணைப்பாளர்

 

17. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் - விழலுக்கு இறைத்த நீர் போல

 

(A) பயனுள்ள செயல்

(B) பயனற்ற செயல்

(C) மிகுதியான செயல்

(D) தகுதியான செயல்

 

18. “நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக

 

(A) வேற்றுமை

(B) ஒற்றுமை

(C) பகைமை

(D) நட்பு

 

19. மாணவர்கள் நன்றாகப் படித்தனர் – எவ்வகை வாக்கியம்

 

(A) பிறவினை

(B) தன்வினை

(C) செயப்பாட்டு வினை

(D) உணர்ச்சி தொடர்

 

20. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார். - எவ்வகை வினை என கண்டறிக.

 

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

(D) செயப்பாட்டு வினை

Previous Post Next Post